தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ய போறீங்களா? வந்தது ஷாக் நியூஸ்.. மத்திய அரசின் வினோத முடிவு
சென்னை: தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்சார விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் விளக்குகள் இல்லாமல் இருக்கின்றன. இந்தநிலையில்தான் தற்போது தேசிய நெடுஞ்சாலை முழுக்க சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடிகின்றது.
சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயண நேரம்: முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதிலும் மின்சார விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை முழுக்க சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில்தான் படிப்படியாக சோலார் விளக்குகள் பயன்பாட்டை மத்திய அரசு நிறுத்த உள்ளதாம். அதாவது இதை நிறுவ, பராமரிக்க அதிக செலவாகிறது. ஒரு சோலார் லைட்டை நிறுவவே பல ஆயிரங்கள் செலவாகிறது. இதனால் படிப்படியாக இதை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் நெடுஞ்சாலை விளக்குகள் இல்லாத நிலை ஏற்படும்.
இதுவரை அமைக்கப்பட்ட விளக்குகள் பராமரிக்கப்படும். ஆனால புதிதாக விளக்குகள் சோலார் முறையில் அமைக்கப்படாது.
பாஸ்ட்டாக் மாற்றம்: அதேபோல் நாடு முழுக்க பாஸ்ட்டேக் அமலில் உள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இது குறைக்கப்பட உள்ளது. விரைவில் இதன் பயன்பாடு குறைக்கப்படும். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன .
டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஏப்ரல் , 2025க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
சுங்கச்சாவடி: சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக வங்கி பிரதிநிதிகளுடனான சமீபத்திய கலந்துரையாடலில், மத்திய அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களை குறிப்பிட்டது. நவம்பர் இறுதி வரை, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
2011 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தோராயமாக 10% வேகமான கட்டுமான நடைபெற்று வருகிறது. இருப்பினும், கட்டுமானத்திற்கான புதிய திட்டங்களின் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 52% குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications