இனி ஒவ்வொரு ரோட்டுக்கும் வரப்போகுது.. மொத்தமாக மாறுது தமிழ்நாடு சாலைகள்.. புதிய வசதி என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும்: முக்கியமாக தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
டெல்லி 21
குஜராத் 53
ஹரியானா 2
கர்நாடகா 10
கேரளா 30
மகாராஷ்டிரா 13
மேகாலயா 1
தமிழ்நாடு 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதை 100க்கும் அதிகமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டிக் பாஸ்ட் சார்ஜர்கள் அவசியம் அதிகம் ஆகி உள்ளதால், அரசு சார்பாக இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திட்டம்: இதை மனதில் வைத்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ)கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார வாகனங்களுக்கு (இ-வாகனங்கள்) மாறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை மத்திய விநியோக வட்டம் மயிலாப்பூரில், டி. நகர், எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் ஆடியோ காட்சிகள் ரோட் ஷோ நடைபெற்றது.
முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற 'கோ எலக்ட்ரிக் பிரசாரம்’ நிறைவு விழாவில் மின்வாரிய அதிகாரிகள், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் வாங்கும் செலவையும் மிச்சப்படுத்துவது குறித்து விரிவாக மக்களுக்கு விளக்கினர்.
இ வாகனங்கள்: இது போக இ வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கம் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
லோ வோல்டேஜ்.. ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது.. ஏசி வாங்கியும் இப்படி ஒரு சிக்கலா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications