சென்னை சிட்டிக்கு நடுவே வரும்.. மிகப்பெரிய 6 வழி சாலை! ஐடி ஊழியர்களுக்கு குஷி! இனி சல்லுன்னு போகலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையை (SPR) ஆறு வழிச்சாலையாகத் தரம் உயர்த்தும் முக்கியத் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத் துறை முன்னெடுத்துள்ளது. காந்தி மண்டபத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வரை இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 2025ல் கோரப்பட்டு, நவம்பர் 2025 வரை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான டெண்டர் தற்போது விடுக்கப்பட்டு உள்ளது.

automobile chennai

ஐடி காரிடர் மற்றும் அண்ணா சாலையை இணைக்கும் இந்தப் பாதை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் புதிய சாலைகள், அகலமான நடைபாதைகள் மற்றும் ஒலித்தடுப்புச் சுவர்களுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இது பரந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். தற்போதைக்கு அங்கே நடைமேடை மட்டும் அளவு சிறுதாக்கப்பட்டு உள்ளது.

பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இச்சாலையின் மேம்பாட்டிற்கு ₹45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதைகளை மேம்படுத்துதல், மற்றும் ஐஐடிக்கு அருகிலுள்ள புற்றுநோய் மையத்தைச் சுற்றி ஒலி தடுப்புச் சுவர் கட்டுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

சர்தார் படேல் சாலை

இச்சாலை, ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர் மற்றும் அண்ணா சாலை ஆகிய இரு முக்கிய சாலைகளை இணைக்கிறது. "கல்வி நிறுவனங்கள் மற்றும் நினைவிடங்கள் நிறைந்த இச்சாலை, அதன் அகலத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியம். மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டதால், அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது," என ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் முதல் அண்ணா சாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு, அதிக வாகனங்களைச் செல்ல அனுமதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இத்திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக, ஐஐடி மெட்ராஸ் முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கி.மீ தூரப் பணிகள் தொடங்கும்.

அதைத் தொடர்ந்து, ராஜ்பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மேம்பால ஆய்வுக்குப் பிறகு சாலையின் அகலத்தை நேரில் ஆய்வு செய்திருந்தார்.

காந்தி மண்டபம் அருகே உள்ள அகலமான நடைபாதைகள் நினைவிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் பாதசாரிகளுக்கு வசதியாக உள்ளன. ஆனால், மருத்துவமனை மற்றும் ஐஐடி மெட்ராஸ் அருகிலுள்ள நடைபாதைகளை அகலப்படுத்த வேண்டியது அவசியம் என அரசு கருதுகிறது. அவை குறுகலாக இருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர்

நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் போக்குவரத்து நிறைந்த சாலையில் நடப்பதைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் நடைபாதை அகலப்படுத்தப்படுவது அவசியமாகும். தற்போது அங்கே நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேன்சர் மருத்துவமனை பகுதியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, கிண்டி முதல் வேளச்சேரி வரையில் குருநானக் கல்லூரி சந்திப்பில் ₹310 கோடி மதிப்பில் 3 கிலோமீட்டர் நீள மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இத்திட்டத்தை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரும் தகவலின்படி, குருநானக் கல்லூரி சந்திப்பு (ஃபீனிக்ஸ் மால் சந்திப்பு) மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆய்வின்படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,459 பயணிகள் கார்களும், குருநானக் கல்லூரி சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,742 பயணிகள் கார்களும் பயணிக்கின்றன. ஏறத்தாழ 7 லட்சம் மக்கள் இப்பகுதியில் தினசரி பயணிக்கின்றனர்.

இந்த நெரிசலைக் குறைக்க ஒரு மேம்பாலம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இரண்டு வழிப்பாதை மற்றும் 12 மீட்டர் அகல மேம்பாலம், வேளச்சேரி பிரதான சாலையில் சர்தார் படேல் சந்திப்பிற்குப் பின் தொடங்கி, வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு அப்பால் நீளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+