எல்லாம் ஓவர்.. இன்னும் 30 நாட்களில்.. சென்னையில் திறக்கப்படும் புதிய பை - பாஸ்.. எங்கே தெரியுமா?
சென்னை: கேளம்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ஜனவரி இறுதிக்குள் முடிவடையும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை போக்குவரத்து துறை ஆணையம், 2018 இல் படூரில் இருந்து தையூர் வரை செல்லும் 4.65-கிமீ நீளமுள்ள ஆறுவழி அகலமான புறவழிச்சாலையை அமைக்கத் தொடங்கியது. கேளம்பாக்கம் புறவழிச்சாலை படூரில் தொடங்கி தையூரில் உள்ள IT பார்க்கில் இணைகிறது.

இந்த பகுதியில் நிறைய உப்பளங்கள் இருந்தன. அந்த நிலங்களில் சாலைகளை அமைப்பது கஷ்டம். அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 1.6 கிலோ மீட்டர் நீளம் முழுமையடையாமல் இருந்தது.
அது இப்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற இரண்டு ஆண்டுகள் ஆனது. நிலத்தின் சந்தை மதிப்பில் பணம் செலுத்த முடியாததால், நிலத்தின் மதிப்பைக் குறைக்கவும் கோரிக்கை அரசு சார்பாக விடுக்கப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணியில் முடியும் தருவாயில் இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன வட்டாரம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக தற்போது 600 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. உப்பு தயாரிக்கும் நிலங்களில் உள்ள மண், சாலை அமைப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பதால் 1.5 மீட்டர் ஆழத்துக்கு மண்ணை அகற்றி உள்ளனர். இங்கே கடுமையான மண்ணை போட்டு நிரப்பி வருகின்றனர். அப்போதுதான் எதிர்காலத்தில் இங்கே வாகனங்கள் மூழ்காது.
இன்னொரு சாலை: இது போக தாம்பரம் புதூர் வருவாய்க் கிராமத்தில், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் அடங்கிய 90 கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
9.3 கி.மீ நீளமுள்ள தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையை முடிக்கும் விதமாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்புகள். கடந்த 40 ஆண்டுகளில் கட்டப்பட்டவை ஆகும்.
வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பங்கேற்று இந்த கட்டுமானங்களை இடித்து வருகின்றனர். ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்தூரில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் வரையிலான நான்கு வழிச் சாலை காட்டப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக விரைவில் 200 மீட்டர் தூரத்தை அகற்றும் பணிகள் செய்யப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே தாம்பரம் புதூர் வருவாய்க் கிராமத்தில், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் அடங்கிய 90 கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இந்த இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள முருகமங்கலத்தில் கணக்கெடுக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக குடியிருப்பாளர்கள் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. பயனாளிகள் செலுத்த வேண்டிய செலவில் மின் இணைப்புக்கான கட்டணங்கள் உட்பட சுமார் ₹6.53 கோடியை மாநில அரசு செலுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் ₹7 லட்சம் செலவாகும் . இவை சுமார் 640 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது.
சாலை பணிகள்: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இங்கே மீதமுள்ள பகுதிகளை 5.38 கோடியில் முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
மப்பேடு மற்றும் நெடுங்குன்றத்தில் ஏற்கனவே உள்ள இருவழிச் சாலைகளை ஆறுவழிப் பாதையாக விரிவுபடுத்தும் திட்டம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாலை அமைக்கப்பட்டால், வேளச்சேரி மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசல் மிகுந்த ஜிஎஸ்டி சாலையை கடந்து பெருங்களத்தூரை 20-30 நிமிடங்களில் அடையலாம்.
எம்எஸ்ஐ சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பை பெருங்களத்தூருடன் இணைக்கும் 8.8 கி.மீ., திட்டம், 10 ஆண்டு கால தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை மாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் மீண்டும், நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
குறிப்பாக பெருங்களத்தூரில் வன கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் நீடித்து வரும் தாமதம் குறித்து தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரக்தியை வெளிப்படுத்தி வந்தனர். முக்கியமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்தம் செய்யப்படாத காரணங்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளாமல் மாநில நெடுஞ்சாலை துறை காலம் தாழ்த்தி வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதால் அங்கே பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications