கார் லைசன்ஸ் வைத்து இருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. இனி ஹெவி வாகனமும் ஓட்டலாம்.. உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்எம்வி லைசன்ஸ் எனப்படும் light motor vehicles (LMVs) வகையான கார் போன்ற வாகனங்களின் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் ஹெவி வாகனங்களை ஓட்டலாம். அதாவது 7,500 kg வரை எடை கொண்ட எந்த ஹெவி வாகனங்களையும் ஓட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொதுவாக எல்எம்வி லைசன்ஸ் வைத்து இருப்பவர்களுக்கு பெரிய ஹெவி வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் இன்சூரன்ஸ் தொடர்பான பிரச்சனையும் வரும். உதாரணமாக எல்எம்வி லைசன்ஸ் வைத்து இருப்பவர் பெரிய வாகனங்களை ஓட்ட அனுமதி கிடையாது. எல்எம்வி லைசன்ஸ் வைத்து இருப்பவர் பெரிய வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால்.. அதற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது.

automobile tamil nadu license

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதற்கு பணம் கொடுக்காது. எல்எம்வி லைசன்ஸ் வைத்துக்கொண்டு ஹெவி வாகனங்களை ஓட்டியது எப்படி என்று கேள்வி கேட்டு இன்சூரன்ஸ் கொடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இது தொடர்பான வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் தொடர்பான 25 ஆண்டுகாலமாக இந்த குழப்பம் நீடித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்ஹா, பங்கஜ் மித்தல் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. எல்எம்வி லைசன்ஸ் எனப்படும் light motor vehicles (LMVs) வகையான கார் போன்ற வாகனங்களின் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் ஹெவி வாகனங்களை ஓட்டலாம். அதாவது 7,500 kg வரை எடை கொண்ட எந்த ஹெவி வாகனங்களையும் ஓட்டலாம்.

LMVs லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் கீழ் கூடுதல் அங்கீகாரம் தேவையில்லாமல் 'போக்குவரத்து வாகனத்தை' இயக்க அனுமதிக்கப்படுவார்கள். LMV உரிமம் வைத்திருப்பவர் 7,500 கிலோவுக்கு மேல் மொத்த எடை கொண்ட நடுத்தர அல்லது கனரக போக்குவரத்து அல்லது பயணிகள் வாகனத்தை ஓட்ட விரும்பினால், போக்குவரத்துத் துறையின் கூடுதல் ஒப்புதல் தேவைப்படும்.

ஆனால் அதற்கு கீழ் எடை கொண்ட வாகனங்களை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை. இதை எல்லாம் காரணம் காட்டி இன்சூரன்ஸ் மறுக்க முடியாது. இன்சூரன்ஸ் கிளைம் கேட்டால்.. அதை கொடுக்க வேண்டும். LMV உரிமம் வைத்திருப்பவர் 7,500 கிலோவுக்கு மேல் மொத்த எடை கொண்ட நடுத்தர அல்லது கனரக போக்குவரத்து அல்லது பயணிகள் வாகனத்தை ஓட்ட அனுமதி வாங்க வேண்டும். அதில் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கொடுக்காமல் போகலாம். ஆனால் மற்ற விவகாரங்களில் இன்சூரன்ஸ் கொடுக்க வேண்டும்.

லைசன்ஸ் மாற்றம்: நாடு முழுக்க வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற புதிய சில விதிகளை அறிமுகப்படுத்தி மத்திய அரசு ஆணையிட்டு உள்ளது. புதிய விதிகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மத்திய மோட்டார் வாகன விதியை பின்பற்றி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதில், மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்க்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.

மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+