சென்னையில் 100 மின்சார பேருந்துகள்.. இவ்வளவு வசதிகளா? ஓடப்போகும் 27 வழித்தடங்கள் எவை எவை?
சென்னை: சென்னையில் சென்னை சென்ட்ரல்-திருவான்மியூர், பாரிமுனை-கோயம்பேடு, பாரிமுனை-தாம்பரம், பாரிமுனை-கே.கே.நகர், பாரிமுனை-பூந்தமல்லி, அடையாறு-தாம்பரம் (மேற்கு) உள்பட 27 வழித்தடங்களில் இயக்க 100 மின்சார பஸ்களை வாங்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் தற்போது டீசலில் ஒடும் பேருந்துகளே இயங்குகின்றன. இது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் என்பதால் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. வரும் காலத்தில் படிப்படியாக மின்சார பேருந்துகள் தான் நாடு முழுவதும் இயங்கும் என்ற நிலை வரப்போகிறது. பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் கார்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள இன்னும் சில ஆண்டுகள் ஓடப்போகின்றன.

இந்நிலையில் படிப்படியாக சென்னையில் மின்சார பேருந்துகள் வரப்போகின்றன. முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் 100 தாழ்தள குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ்களை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் ஓடப்போகும் மின்சார பேருந்தின் விலை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டரில் வெற்றி பெறும் தனியார் நிறுவனமே மின்சார பஸ்களை இயக்குவதோடு, பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த மின்சார பஸ் ஒன்றின் விலை ரூ.1.2 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார பேருந்துகள் எந்த ரூட்டில் இயங்கப்படும்: சென்னை சென்ட்ரல் பல்லவன் சாலை, அடையாறு பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஓடப்போகின்றன. இதன்படி பாரிமுனை-பூந்தமல்லி, அடையாறு-தாம்பரம் (மேற்கு), திருவான்மியூர்-பெரம்பூர், தியாகராயநகர்-திருப்போரூர், திருவான்மியூர்-தாம்பரம் சென்னை சென்டிரல்-திருவான்மியூர், பாரிமுனை-கோயம்பேடு, பாரிமுனை-தாம்பரம், பாரிமுனை-கே.கே.நகர், உள்பட 27 வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகள் ஓடப்போகின்றன.
சென்னையில் மின்சார பேருந்துகளில் உள்ள வசதிகள்: சென்னையில் ஓடப்போகும் மின்சார பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஆட்டோமேட்டிக்காக பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான கதவுகள், அகண்ட கண்ணாடி உடைய ஜன்னல்கள், தீ அணைக்கும் கருவி, முதல் உதவி பெட்டகம், 2+1 என்ற அடிப்படையில் 35 பேர் அமரும் வகையிலான இருக்கைகள், 35 பேர் நின்றவாறு பயணம் செய்யும் இடவசதி உள்பட பல்வேறு அம்சங்கள் பேருந்துகளில் இடம் பெற்றிருக்கும்.
சென்னை மின்சார பேருந்துகள் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக இயங்கும்: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் வாங்க உள்ள 1000 மின்சார பஸ்கள், தொடர்ச்சியாக 8 மணி நேரம் இயங்கும் ஆற்றல் உடையவை, பின்னர் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும் மீண்டும் பழையபடி ஓடத்தொடங்கிவிடும். இந்த மின்சார பஸ்ஸினை தனியார் நிறுவனம் இயக்கினாலும் டிக்கெட் வருவாய் மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இருக்கும் என்றும், பணி நேரத்தின் அடிப்படையில் பஸ்களை பராமரித்து, இயக்கும் தனியார் நிறுவனத்துக்கு நிலையான தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட உள்ள மின்சார பேருந்துகளை இயக்கும் இந்த திட்டம் மதுரை, திருச்சி மற்றும் கோவை உள்பட மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications