வாயை பிளந்த டிரைவர்கள்! பெங்களூர்-சென்னை சாலையில் நடந்த சம்பவம்! இதுக்குத்தான் எக்ஸ்பிரஸ் வே வேணும்
சென்னை: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசியம்: இந்த நிலையில்தான் எக்ஸ்பிரஸ் வேயின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் அந்த சாலை முழுக்க போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதிலும் டோல்கேட் இருக்கும் பகுதிகளில் மிக மிக மெதுவாக வாகனங்கள் சென்றன. ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் காரணமாக 6 மணி நேர பயணம் 9 மணி நேரம் ஆகியது.
4 வழி சாலை என்பதால் பல இடங்களில் வாகனங்கள் அப்படியே ஆமை வேகத்தில் சென்றது. டிரைவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக வாகனத்தை செலுத்தினர். எக்ஸ்பிரஸ் வேயின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
எப்போது முடியும்: முக்கியமாக சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 9 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சாலையில் கீழ்கண்ட பல அதிரடி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. சாலையில் 90 சதவிகிதம் ஸ்பீட் பிரேக் கிடையாது. 10 சதவிகித இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் ஸ்பீட் பிரேக் இருக்கும். இவை உயரம் குறைவாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதே சமயம் வேகத்தை குறைக்க உதவும்.
சாலை விதிமீறல்களை, குற்றங்களை கண்காணிக்க கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் கண்காணிக்கும் கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளதால் நேரடியாக பைன் போட எளிமையாக இருக்கும்.
பைக் உள்ளிட்ட மெதுவான வாகனங்கள் செல்ல தனி பைபாஸ் இருக்கும். அதனால் இங்கே உள்ளூர் வாகனங்கள் செல்லாது. உள்ளூர் வாகனங்கள் கிராஸ் செய்ய கீழ்மட்ட பாலம் இருக்கும். அதனால் நடுவில் யாரும் வருவார்களோ என்ற அச்சம் இருக்காது.
டோல் கேட்டுகள் 15 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் வகையில் விரிவாக கட்டப்பட உள்ளது. இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்போது முடியும்: சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் வே சாலை அடுத்த வருட இறுதிக்குள் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் வே கட்டுமானத்திற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024 அக்டோபர் மாதம் 9ம் தேதி இந்த சாலையின் கடைசி கட்டுமானம் முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே மாதம் இந்த சாலை தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications