உங்க கிட்ட கார் இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. போலீசார் விடுத்த எச்சரிக்கை.. அலறும் வாகன ஓட்டிகள்
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் சமீப நாட்களாக நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக கார் டிரைவர்கள் பலர் டேஷ் கேம் வைக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் முக்கியமான சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கியமாக இரவு நேரங்களில் காரில் செல்லும் மக்களை கும்பல்கள் துரத்தி தாக்கி பணம் பறிப்பது, மோசடி செய்வது அதிகரித்து உள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறைகள்தான் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றங்கள் எப்படி நடக்கிறது என்று விவரமாக பார்க்கலாம்.

குற்றம் நடக்கும் விதம்: இந்த குற்றத்திற்கு குறி வைக்கப்படுவது கார்கள்தான். பெரும்பாலும் வேறு மாநில ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பர் கொண்ட வாகனங்கள். இந்த கார்கள் ஆள் குறைவாக உள்ள சாலையில் செல்கையில் முதலில் 2-3 ஸ்கூட்டர்கள் அருகில் தொடர்ந்து வரும். அதன்பின் முன்னும் பின்னும், இடது பக்கமும் சென்று.. காரை முந்த விடாமல் அணை கட்டுவார்கள்.
இப்படியே நீண்ட தூரம் செல்வார்கள். நாம் நிறுத்தி கேள்வி கேட்டால்.. நிறுத்திய உடன் முன் பக்கம் வந்து பைக்கால் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டதாக கூறி பணம் கேட்பார்கள். இல்லையென்றால் ஜன்னலை உடைத்து உள்ளே உள்ளவர்களை வெளியே இழுத்து தாக்கி அதன்பின் பணம் கேட்பார்கள்.
அதிகரிக்கும் மோசடிகள்: நாம் நிறுத்தாமல் அப்படியே மெதுவாக சென்றாலும் பின்பக்கமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்தி பணம் கேட்பார்கள். எப்படியாவது தப்பி யு டர்ன் போட்டு வேறு வழியில் செல்ல முயன்றாலும் பின் தொடர்ந்து வீடு வரை கூட வருவார்கள். 4-5 ஸ்கூட்டரில் இப்படி வண்டிக்கு ரெண்டு பேர் என்று 10 வரை சேர்ந்து செய்யும் மோசடி ஆகும் இது.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருந்து ஆலோசகரான ஆஷிஸ் பரன் மண்டல் காரில் செல்கையில் இதேபோல் சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அவர் பெங்களூரின் அசோகா பில்லரில் இருந்து லால்பாக்கின் மேற்கு வாயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பைக்கில் வந்த இருவர் அவரது காருக்குப் பக்கத்தில் வந்து.. தங்களை அந்த கார் மோதிவிட்டதாக கூறி.. , உடனடியாக நஷ்டஈடு வழங்கக் கோரி சண்டை போட்டுள்ளனர். ஆட்களை அழைத்து வந்து காரை சுற்றி நின்று சண்டை போட்டு ரூ 30,000 செலுத்திய பின்னரே விட்டுள்ளனர். அந்த பைக்கை கார் இடிக்கவே இல்லை என்றாலும் இடித்ததாக கூறி இப்படி செய்துள்ளனர்.
இந்த செய்தி ஒரு சம்பவம் அல்ல.. இதேபோல் பல சம்பவங்கள் கடந்த 1- 2 வருடங்களாக பெங்களூர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லவே முடியாது என்று மக்கள் அஞ்சும் அளவிற்கு இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முக்கியமாக கார்களை குறி வைத்து பல கும்பல்கள் இப்படி குற்றச்செயல்களை செய்ய தொடங்கி உள்ளன.
இது தொடர்பாக வெளியான செய்தியில், பயணிகளை குறிவைக்கும் டெல்லியின் மோசமான 'தக் தக்' கும்பலைப் போலவே, இந்த பெங்களூரு மோசடி செய்பவர்கள் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் ஐடி காரிடாரில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இதுபோல பலர் இந்த கும்பல்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆடு முழுக்க போலீசார் இதில் சில கைது நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தாலும் இன்னமும் இந்த கும்பலை அடக்க முடியாதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
டேஷ் கேம் வைப்பு: தேசிய நெடுஞ்சாலைகளில் சமீப நாட்களாக சாலையில் நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக கார் டிரைவர்கள் பலர் டேஷ் கேம் வைக்க தொடங்கி உள்ளனர். டேஷ் கேம் வைப்பதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த பொய்யான விபத்துகளை ரெக்கார்ட் செய்வதற்காக கேமராக்களை பொருத்தும் பணி மக்கள் இடையே அதிகரித்து உள்ளது. கார் உள்ளவர்கள் கண்டிப்பாக டேஷ் கேம் வைக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய விபத்து: பொதுவாக ஒரு நகரம் வளரும் போது.. அந்த நகரத்தோடு சேர்த்து மக்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டும். ஆனால் உலகம் முழுக்கவே மக்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பதற்கு பதிலாக பெரு நகரங்களில் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, சிட்னி, மும்பை, டெல்லி என்று பெருநகரங்கள் பல குற்றங்களின் கூடாரம் ஆகி உள்ளது.
அந்த வகையில்தான் தற்போது பெங்களூர் மாநகரமும் புதிய விதமான குற்றச்செயல்கள் ஒன்றை சந்திக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இருப்பதை விட இந்திய குற்றப்பிரிவு ஆவண ரீதியாக பெங்களூரில்தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. முக்கியமாக போன் ஸ்னாட்சிங், செயின் திருட்டு என்று சாலைகளில் நடக்கும் குற்றங்கள்தான் அதிகம்.
அந்த வகையில்தான் தற்போது புதிதாக சாலைகளில் இந்த பொய்யான விபத்து ஏற்படுத்தி, வாகனங்களை வழிமறித்து தாக்கும் புது விதமான குற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications