200 சவரன் தங்க நகை சேர்த்த சில்க் ஸ்மிதா.. சொத்துகளை யாருக்கு தந்தார்? நடிகையின் மறக்கப்பட்ட உண்மை
சென்னை: சில்க் ஸ்மிதாவுக்கு தன்னுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு ஒரு குழந்தைத்தனமான மனநிலையில் இருந்தார். மற்றவர்களுக்கு வாரி வழங்கிய சில்க் ஸ்மிதா, தனது குடும்பத்திற்கு எதுவுமே செய்யாமல் போயிருக்க வாய்ப்பில்லை, ஆனால் அந்தச் சொத்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவிடாமல் யாரோ தடுத்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் இயக்குனர் ஹரிஹரன்
உங்கள் நிலம் என்ற யூடியூப் சேனலுக்கு, சில்க் ஸ்மிதாவிடம் நெருங்கி பழகிய இயக்குனர் ஹரிஹரன் ஒரு பேட்டி தந்துள்ளார்..

அதில், "சில்க் ஸ்மிதா பலருக்கும் கவர்ச்சி நடிகையாகவே தெரியும்.. ஆனால், அவர் மிகப்பெரிய ஜீனியஸ்.. மனிதாபிமானம் நிறைந்தவர். பண விஷயத்தில் தயாரிப்பாளர்களிடம் கறாராக இருந்தாலும், கஷ்டப்படும் பல உதவி இயக்குநர்களுக்கு தாராளமாக பண உதவி செய்தவர்.
விஜயலட்சுமி என்ற பெயர் கொண்டவர் சில்க்.. வினு சக்கரவர்த்தி ஒருமுறை தன்னுடைய வீட்டின் மாடியில் உட்கார்ந்திருந்தபோது, அருகில் இருந்த மாவு மில்லுக்கு மிளகாய் அரைக்க வந்திருக்கிறார்.. அப்போது அந்த பெண்ணின் கண்களில் இருந்த ஒரு விதமான ஈர்ப்பையும் வித்தியாசமான தோற்றத்தையும் வினு சக்கரவர்த்தி கவனித்தார்.
டிஆர் ராஜகுமாரிக்கு அடுத்து
உடனடியாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த வினுசக்ரவர்த்தி விசாரித்துள்ளார்.. அப்போது ஒரு நடிகையின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொல்லி உள்ளார்.. மறுநாளே வினு சக்கரவர்த்தி, தான் கதை வசனம் எழுதிய 'வண்டிச் சக்கரம்' படத்தில் அவருக்கு வாய்ப்பு அளித்தார்.
அப்போதுதான் அவரது பெயரை சுமிதா என்று மாற்றி வைத்தார்.. அந்த படத்தின் கேரக்டரின் 'சில்க்' என்பதே பின்னாளில் அவரது அடையாளமாக மாறி, 'சில்க் ஸ்மிதா' என்று அழைக்கப்பட்டார்.
சில்க் ஸ்மிதாவின் கண்கள், உடல்வாகு அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. பழம்பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரிக்கு அடுத்தபடியாக, சில்க்குக்குதான் இவ்வளவு அழகான, கவர்ச்சியான கண்கள் அமைந்தது..
குழந்தைத்தனம் - மோசமான கவர்ச்சி உடைகள்
பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களே சில்க்குக்கு தரப்பட்டன.. படுமோசமான கவர்ச்சி உடைகள் தரப்பட்டன.. பலரும் அந்த உடைகளை அணிய தயங்கியபோது, சில்க் அவைகளை அணிந்து நடித்தார்.. காரணம், வாங்கும் பணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதனால் தான், மற்ற நடிகைகள் தயங்கும் ஆடைகளைக்கூட இயக்குனர் கேட்டால் துணிச்சலாக அணிந்து நடித்தார்.
நிஜ வாழ்க்கையில் மிகவும் குழந்தைத் தனமான குணம் கொண்டவர். யாரையும் எளிதில் நம்பிவிடும் சுபாவம் கொண்டவர். கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தையும் தாண்டி, அசோக் குமார் போன்ற பல இயக்குநர்கள் அவரது நடிப்புத் திறமையை சரியாகப் பயன்படுத்தினர்..
சில்க் ஸ்மிதா தனது உழைப்பால் எக்கச்சக்கமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். அவர் தனது உழைப்பின் மூலம் சென்னை மற்றும் ஆந்திராவில் நிறைய சொத்துக்களை சேர்த்தார். குறிப்பாக சென்னையில் தனலட்சுமி காலனியில் அவருக்கு ஒரு பெரிய பில்டிங் இருந்தது..
200 சவரன் தங்க நகைகள்
சில்க்குக்கு தங்க நகைகள் மீது அதிக விருப்பம் இருந்தது. சுமார் 100 முதல் 200 சவரன் நகைகளை அவர் சேர்த்து வைத்திருந்தார்.. ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு அந்த நகைகள் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை..
சில்க் உயிருடன் இருந்தவரை எந்த ஒரு போட்டோவிலும் அநத நகைகளை அணிந்து அழகு பார்த்தது இல்லை. அவர் சேர்த்த சொத்துக்கள் அவருக்கும் பயன்படவில்லை, அவர் குடும்பத்திற்கும் பயன்படவில்லை.
யார் யாருக்கோ போய் சேர்ந்த சொத்து
அந்த வீட்டில் அவர் இரவு தூங்குவதோடு சரி, அங்கு என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு ஒரு குழந்தைத்தனமான மனநிலையில் இருந்தார். மற்றவர்களுக்கு வாரி வழங்கிய சில்க் ஸ்மிதா, தனது குடும்பத்திற்கு எதுவுமே செய்யாமல் போயிருக்க வாய்ப்பில்லை, ஆனால் அந்தச் சொத்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவிடாமல் யாரோ தடுத்துவிட்டார்கள்..
உதவி செய்யாத நிலை: மற்றவர்களுக்கு வாரி வழங்கிய ஸ்மிதா, தனது குடும்பத்திற்கு எதுவுமே செய்யாமல் போயிருக்க வாய்ப்பில்லை, ஆனால் அந்தச் சொத்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவிடாமல் யாரோ தடுத்துவிட்டார்கள் என்று பேசப்படுகிறது.
சில்க் ஸ்மிதாவின் ஆசை
சமீபத்தில் சில்க் ஸ்மிதாவின் சொந்த தம்பி பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், தனக்கு அக்கா எந்தவிதமான பண உதவியையும் செய்யவில்லை, அக்காவின் சொத்து என்ன ஆனது என்றும் தெரியவில்லை, சென்னைக்கு சென்று அந்த சொத்து விஷயமாக போராட போவதாக கூறியிருந்தார். சில்க் தம்பி சொல்வது அத்தனையும் உண்மை.
ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும், நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது மிகப்பெரிய ஆசையாக இருந்தது. கடைசிவரை அது நிறைவேறவேயில்லை, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையானவர் கிடையாது.. இன்றுவரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார். .












Click it and Unblock the Notifications