Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாஸ் போல பராசக்தி சிவகார்த்திகேயன் நடந்துக்கலயே? புலி புலி தான், எலி எலி தான்! நேரம் இடிக்குதே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், 'பராசக்தி' ஆடியோ லான்ச் சன் டிவியில் ஒளிபரப்பப்படுவது ஒரு திட்டமிட்ட வன்மமாகவே கருதப்படுகிறது. நாளை மாற்ற முடியாவிட்டாலும், நேரத்தையாவது மாற்றி இருக்கலாம்" என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. மேலும் தியேட்டர் ரிலீஸ் குறித்த சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், "'ஜனநாயகன்' படத்தின் டிரைலர் வெளியான அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட ஆடியோ லான்ச் தொடங்கியுள்ளது. ஆனால் சோஷியல் மீடியா முழுவதும் 'ஜனநாயகன்' டிரைலர் பற்றிய பேச்சுகளே அதிகம் உள்ளன.

Parasakthi Sivakarthikeyan Prabhas

விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து

மலேசியாவில் நடந்த ஆடியோ லான்ச்சில் செல்போன் பயன்படுத்தக் கூடாது, இதை ஒரு சேனலுக்கு வழங்க போகிறோம் என்றெல்லாம் கட்டுப்பாடு இருந்தும்கூட, மக்கள் விழாவை மறைமுகமாக எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.. அதாவது நாமளே அந்த விழாவில் பங்கேற்றது போன்ற தோற்றத்தையே உருவாக்கிவிட்டார்கள்.. இதுதான் ஒரு பெரிய ஸ்டாருக்கான அடையாளமே. யார் பெரிய ஸ்டார்? யார் நடிகர்? என்பதை இங்குதான் அடையாளப்படுத்தி பார்க்கணும்.

சிவகார்த்திகேயன் படத்தின் ஆடியோ லான்ச் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய அளவில் தாக்கமோ அல்லது பதிவுகளோ இல்லையே.. இதே கட்டுப்பாடுதான் சிவகார்த்திகேயன் படத்துக்கும் விதிக்கப்பட்டது.. ஆனாலும், யாரும் பராசக்தி ஆடியோ விழா நிகழ்வை செல்போனில் வீடியோ எடுத்து எங்கும் பதிவிடவில்லையே?

ஆக, புலி புலிதான் எலி எலிதான்.. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வருவதால், அவை தொடர்பான அடுத்தடுத்த டிரைலர், ஆடியோ லான்ச் வருவது தவிர்க்க முடியாது..

'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், 'பராசக்தி' ஆடியோ லான்ச் சன் டிவியில் ஒளிபரப்பப்படுவது ஒரு திட்டமிட்ட வன்மமாகவே கருதப்படுகிறது. நாளை மாற்ற முடியாவிட்டாலும், நேரத்தையாவது மாற்றி இருக்கலாம்...

சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்கள்

நேரமும் அதே நேரமாக உள்ளது.. இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான போட்டி என்பது டீக்கடைகளில் கூட சாதாரண மக்கள் பேசும் அளவுக்கு ஒரு பெரிய விவாதமாக மாறிப்போய்விட்டது.. ஆனாலும் ரிசல்ட் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

இதற்கு முன்னால் நடந்த ஆடியோ லான்ச்களில் சிவகார்த்திகேயன் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது விஜய்யுடன் நேரடியாக போட்டியிடுவது மற்றும் விஜய் ரசிகர்கள் அவர் மீது கொண்டுள்ள கோபம் குறித்து இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசினால், அவர் பெரிய மனுஷன், பேசாவிட்டால் சாதாரண மனுஷன்.

பிரபாஸ் - சிரஞ்சீவி உதாரணம்

ஆந்திராவில் பிரபாஸ் மற்றும் சிரஞ்சீவி படங்கள் ஒரே நேரத்தில் வருகிறது.. இரண்டுமே பெரிய படங்கள்.. அங்கேயும் இரு தரப்பு ரசிகர்களிடம் சண்டை, போட்டி ஓடுகிறது..

உடனே பிரபாஸ் பெருந்தன்மையுடன் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டார்.. அதில் சிரஞ்சீவி சார் படங்களை பார்த்துதான் நாங்கள் எல்லாம் வளர்ந்தோம்.. அதுவும் பண்டிகை நாட்களில் ரசிகர்களை அவரது படத்தை தியேட்டர்களில் முன்வரிசையுடன் உட்கார்ந்து பார்த்து மகிழ்ந்தோம். இப்போது அவரது படத்துடன் என் படமும் வருவது அளவில்லாத சந்தோஷம், அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்" என்று சொல்லி அனைத்து தரப்பு ரசிகர்களையும் குளிர செய்துவிட்டார்..

இதனால் ரசிகர்களிடம் சண்டை, போட்டி என்ற எண்ணமே உடைந்துவிட்டது.. இதே போன்ற ஒரு பெருந்தன்மை சிவகார்த்திகேயனுக்கும் இருக்க வேண்டும். இதை விரைவில் சிவகார்த்திகேயன் செய்வாரா? என்று என்று தெரியவில்லை..

டிக்கெட் புக்கிங் மற்றும் லாபப் பங்கீடு

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் இன்னும் புக்கிங் தொடங்காததற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் 75-80% வரை அதிக லாபம் கேட்பதுதான் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்..

இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் விஜய்க்கு போன் செய்து பேசியுள்ளதாகவும், தியேட்டர் உரிமையாளர்கள் விஜய்யின் ஆரம்பகாலத்திலிருந்து அவருடன் பயணிப்பதால் அவர்களுக்கு ஒரு 5% கூடுதலாக கொடுத்து இந்த பிரச்சனையை சரிசெய்ய விஜய் தயாரிப்பாளருக்குப் பரிந்துரைக்கலாம் என்றும் தெரிகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் 2 படங்களுக்கும் சமமாக அல்லது 'ஜனநாயகன்' படத்திற்கு சற்று கூடுதலாக ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

தியேட்டர்களில் முக்கியத்துவம்

ஒரு தியேட்டரில் 4 ஸ்கிரீன்கள் இருந்தால், இரண்டில் 'பராசக்தி' மற்றும் இரண்டில் 'ஜனநாயகன்' என்று பிரிக்கத் திட்டமிட்டுள்ளனர். 5 காட்சிகள் இருந்தால், மூன்றில் 'ஜனநாயகன்', இரண்டில் 'பராசக்தி' திரையிட வாய்ப்புள்ளது. விஜய்யைப் பொறுத்தவரை முதல் 5 நாட்களுக்கு வசூல் மிகச் சிறப்பாக இருக்கும், அதற்கு கவலைப்படத் தேவையில்லை.

படம் நீண்ட நாட்கள் ஓட வேண்டுமென்றால் கதை நன்றாக இருக்க வேண்டும்.. 'பராசக்தி' படமும் நன்றாக இருப்பதாகத் தகவல்கள் வருவதால், மக்கள் 2 படங்களையுமே பார்க்கும் சூழல் உருவாகும்.. அப்போதுதான் ஷேரிங், அரசியல் தலையீடு பற்றி தெரியவரும். தனித்தனியாக படங்கள் வந்திருந்தால் நிலைமையே வேறு, ஆனால் இப்போது ஒன்றாக வருவதால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய வசூல் சாதனையை இந்த 2 படங்களும் படைக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+