ஆதவன் படத்தில் குழந்தையாக நடித்த பூஜாவை நினைவிருக்கா? இப்போ சோசியல் மீடியாவில் கலக்கல்! ஆளே மாறிட்டாங்களே
சென்னை: 2000-களின் இறுதியில் வெளியான பல தமிழ் படங்களில், சில குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக, நடிகர் சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தில் தோன்றிய ஒரு சிறுமியும் இருந்தார். திரையில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், அந்தச் சிறுமியின் இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களுக்கு நன்றாகவே நினைவில் நிலைத்தன.
இப்போது அந்த படம் வந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில், அந்தக் குழந்தை நட்சத்திரம் தற்போது வளர்ந்த தோற்றத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மூலம் மீண்டும் பேசுபொருளாகி வருகிறார். "இது உண்மையிலேயே ஆதவன் படத்தில் நடித்த அந்தச் சிறுமிதானா?" என்ற ஆச்சரிய கேள்வியுடன் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த பயணம்
'ஆதவன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பூஜா பரேஷ், பின்னர் சில தமிழ் படங்களிலும் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில், குழந்தை நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், கிடைத்த சிறிய வாய்ப்புகளிலும் தன்னை நினைவில் நிற்கும் வகையில் வெளிப்படுத்தினார்.
வாராயோ வாராயோ பாடலுக்கு டான்ஸ், குடும்பக் காட்சிகளில் அவருடைய இயல்பான நடிப்பு போன்றவை அவரை மற்ற குழந்தை நடிகைகளிடமிருந்து தனித்துவமாக காட்டின.
சினிமாவை தாண்டிய வாழ்க்கைப் பாதை
பல குழந்தை நட்சத்திரங்கள் போலவே, பூஜாவும் பெரிய நடிகையாக தொடர்வார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவர் திரையுலகிலிருந்து விலகி, வேறு துறைகளில் தன்னை உருவாக்கிக் கொண்டார். தற்போது பேஷன் மற்றும் மேக்கப் துறையில் பயிற்சி பெற்று, அதனை தொழிலாக மாற்றி வருகிறார். மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும், ஸ்டைலிங் சார்ந்த பணிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சினிமா அல்லாத ஒரு படைப்புத் துறையில் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
திரையுலக அனுபவங்கள்
சமீபத்தில், முன்னாள் குழந்தை நட்சத்திரங்கள் சிலர், தங்கள் திரையுலக அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து வருவது கவனம் பெறுகிறது. பூஜா பரேஷும் இதேபோல், தன் சிறு வயதில் சந்தித்த சில சங்கடமான அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருந்தார்.
அந்த அனுபவங்கள், அவரை சினிமாவை வாழ்க்கைப் பாதையாக தேர்வு செய்யாமல், வேறு துறையில் கவனம் செலுத்தச் செய்த முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்களிடையே உருவான புதிய கவனம்
பல ஆண்டுகளுக்கு பிறகு வைரலான புகைப்படங்கள் மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ள பூஜாவை பார்த்த ரசிகர்கள், "காலம் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது" என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். இதே கமெண்ட் போடுபவர்கள் கூட பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்க்கும் அதிகமான வித்தியாசமாகி இருப்பார்கள். ஆனாலும் குழந்தையாக பார்த்தவங்க இப்போ இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ஆச்சரியத்தோடு கமெண்ட்ஸ்கள் மட்டும் குவிக்கின்றன.
மீண்டும் நடிப்பு
திரையுலகில் இருந்து விலகியிருந்தாலும், சரியான கதாபாத்திரம் மற்றும் பாதுகாப்பான சூழல் கிடைத்தால் மீண்டும் நடிப்புக்கு வருவேன் என்பது போல பேட்டிகள் பேசி இருக்கிறார். குறிப்பாக, குறும்படங்கள் அல்லது வெப் தொடர்கள் போன்ற புதிய ஊடகங்களில் வாய்ப்புகள் கிடைத்தால், தன்னை மீண்டும் வெளிப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications