11 வருஷத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் அப்பாஸ்.. உருக்கமான வீடியோ! ஜிவி பிரகாஷ் சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த "சாக்லேட் பாய்" நடிகர்களில் முக்கியமானவர் அப்பாஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் திரைக்கு வருகிறார் என்ற செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி
சுமார் 11-12 ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்த அப்பாஸ், தற்போது ஜிவி பிரகாஷ் (G. V. Prakash Kumar) நடிக்கும் ஹாப்பி ராஜ் (Happy Raj) படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் லவ் டுடே படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் தான். அதுபோல ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் பேட்டி
இந்த படம் குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ், "இந்த படத்தின் மூலம் யாருடைய வாழ்க்கை மாறுகிறது என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக அப்பாஸ் வாழ்க்கை மாறும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அப்பாஸ் இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்றும், அவரது கேரக்டர் கதைக்கு பெரிய திருப்பமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அப்பாஸ் ரொம்பவும் இனிமையானவர் எளிதாக எல்லாருடனும் பழகி விடும் நபர் என்றும் ஜி.வி பிரகாஷ் பெருமையாக பேசி இருக்கிறார்.
காதல் தேசம் முதல் ரசிகர்களின் இதயத்தில்
அப்பாஸ், காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த ஒரு படத்திலேயே அவர் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பிறகு பல ஹிட் படங்களில் நடித்த அவர், தனது தனித்துவமான ஸ்டைல், அழகான திரை முன்னிலை, மென்மையான நடிப்பு ஆகியவற்றால் "சாக்லேட் பாய்" என்ற பட்டத்தை பெற்றார்.
சினிமாவில் தனி இடம் பிடித்த நடிகர்
90களில் அப்பாஸ் நடித்த படங்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. காதல் கதைகளில் அவருடைய ஸ்க்ரீன் பிரசென்ஸ் வேற லெவல் என்று சொல்லலாம். அவரது ஹேர்ஸ்டைல் முதல் உடை அணிவது வரை அப்போது பல இளைஞர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தார்.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்
அப்பாஸ் தனது ஆரம்ப காலத்திலேயே பல விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றவர். குறிப்பாக புதிய நடிகராக அவர் பெற்ற அங்கீகாரங்கள் அவரை விரைவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்த்தியது.
இடைவெளி
சினிமாவில் ஒரு கட்டத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் குறைந்ததால், அப்பாஸ் வெளிநாட்டில் செட்டிலாகி வேறு துறைகளில் கவனம் செலுத்தினார். ஆனால் ரசிகர்கள் மனதில் அவர் மீது இருந்த அன்பு ஒருபோதும் குறையவில்லை. "அப்பாஸ் மீண்டும் வரணும்" என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருந்ததே தவிர குறையவில்லை.
பலரும் சமூக வலைதளங்களில்,"இது ஒரு கம்பேக் மட்டும் இல்ல... அப்பாஸின் மறுபிறப்பு" என்று பாராட்டி வருகின்றனர். சினிமாவில் ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் அதற்கான தைரியத்தையும் நம்பிக்கையையும் காட்டியிருக்கிறார் அப்பாஸ்.
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஹாப்பி ராஜ்
இந்த படத்தில் அப்பாஸின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால், அவர் எப்படி திரையில் மீண்டும் மின்னப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த அந்த சிரிப்பு... அந்த க்யூட்டான ஸ்டைல்... மீண்டும் திரையில் பார்க்கலாம் என்பதே ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷமாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications