Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபிநய் எலும்பும் தோலுமாய் யாருமில்லாத வீட்டில்.. அவரால் மறக்க முடியாத நடிகர் விஜய சேதுபதி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் வெற்றி, பணம் தந்தாலும் அந்த போதையில் ஆடக்கூடாது.. வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும்.. ஆனால் அதீத ஆர்வம், அதீத எண்ணம் வைக்க வேண்டாம் என்று மறைந்த நடிகர் அபிநய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது சத்தியமான உண்மை.. சினிமாவுக்கு வரும் இன்றைய இளைஞர்களுக்கு அபிநய் மிகச்சிறந்த உதாரணம்: என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu என்ற யூடியூபில் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "சென்னை ரங்கராஜபுரத்தில் யாருமில்லாத வீட்டில் இறந்து கிடந்துள்ளார் நடிகர் அபிநய்.. காலையில் யாரோ தெரிந்தவர்கள் கதவை தட்டியுள்ளனர்.. கதவை திறக்காததால் உள்ளே சென்று பார்த்தபோது, ஒடிசலான உருவத்தில், எலும்பும் தோலுமாய் பார்த்து பகீர் என்று ஆகிவிட்டதாம்..

Cinema Vijay Sethupathi Abinay

ஒடிசலான உருவம் - எலும்பும் தோலுமாய்

யாருக்கு தகவல் சொல்வது என்று தெரியவில்லை, உறவினர்கள் யாரும் இல்லை.. அதன்பிறகுதான் நடிகர் சங்கத்துக்கும் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.. நடிகர் சங்க நிர்வாகிகளும், அபிநய்யின் உறவினர்களை எங்கெங்கோ தேடி முயற்சித்தனர்..

உற்றார், உறவினர், நண்பர், குடும்பத்தினர் யாருமே இல்லாமல், கொடிய நோயிலும் ஒருவர் தனிமையில் இருந்திருந்தால், அவரது மனநிலைமை எப்படி இருந்திருக்கும்? ஒவ்வொரு நாளும் நரகத்தை அனுபவித்திருக்கிறார்.. வேதனையின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்..

புத்திசாலித்தனம் தேவை

பாலச்சந்தர் அடிக்கடி சொல்வார், சினிமாவில் அறிவாளிக்கு இடமில்லை, புத்திசாலிக்குதான் இடம் என்பார்.. அது சத்தியமான உண்மை..

சினிமாவில் சமயோஜித புத்திதான் தேவை.. நம்மை யார், எங்கிருந்து தாக்குவார்கள், அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது, பணத்தையும், வாய்ப்பை எப்படி பெறுவது, புகழையும் எப்படி காப்பது? என்பதைதான் தெரிந்து வைத்து கொள்ளவேண்டும்..

துள்ளுவதோ இளமை படம் ஹிட்டுக்கு பிறகு 8 படங்கள் ஒரேடியாக அபிநய்க்கு குவிந்தது.. ஆனால், கதையை கேட்பது, தனக்கான கதையை தேர்ந்தெடுப்பது போன்றவற்றில் அபிநய்க்கு சறுக்கிவிட்டார்.. பிறகு வாய்ப்பு தேடி படக்கம்பெனிக்கு அலைந்து கூனிக்குறுகி, அவமானப்பட்டார்.

விஜய் சேதுபதி உதவி

அபிநய்யின் அம்மா, மலையாளத்தில் பிரபல நடிகையாவார்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நட்சத்திரங்கள் வரை அங்கே இணைந்து நடித்தவர்..

தமிழில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக, ஒரு படத்திலும் நடித்துள்ளார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு அம்மாவும் இறந்துவிட்டார்.. தன் தாயின் மரணமும் அபிநய்யை நிலைகுலைய வைத்துவிட்டது..

அப்போது சினிமா உலகிலிருந்து யாருமே வரவில்லையாம்.. விஜய் சேதுபதி மட்டும் வந்திருந்து, சடலத்தை தோள் கொடுத்து ஒருவராக தூக்கியிருக்கிறார்.. இதற்கு அபிநய் பலமுறை நெகிழ்ந்து நன்றி சொல்லி உள்ளார்.. ஆனால், சினிமா உலகத்தை அப்போதே வெறுத்துவிட்டார்..

கேபிஒய் பாலா

பட வாய்ப்பு இல்லாமல், தாயின் மரணத்திலிருந்து மீள முடியாமல் அவதிக்கு ஆளாகினார் அபிநய்.. கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, யாரிடமும் சொல்லாமல் உடல் குறுகிப்போய் இருந்தபோதுதான், வாழ்க்கையின் மீது அபிநய்க்கு பயம் வந்துள்ளது.. யாரிடமாவது உதவி கேட்கலாமே என்று நினைத்து, அதற்கு பின்பு தயங்கி உதவி கேட்டபோதுதான், கேபிஒய் பாலாவின் உதவி அவருக்கு கிடைத்துள்ளது..

கேபிஒய் மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், நடிகர் அபிநய் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு உதவிகள் தேவை என்பதை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார்.. அதன்பிறகுதான் மீடியாவுக்கே தெரியவந்தது..

அபிநய் பெஸ்ட் உதாரணம்

ஒரு பேட்டியில் அபிநய் சொன்னார், "சினிமாவை முழுசா நம்பாதீங்க, எப்போதுமே ஒருவேலையை கையில் வைத்து கொள்ள வேண்டும்.. சினிமா கை கொடுக்காவிட்டாலும், உங்களிடமுள்ள வேலை, வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கை கொடுக்கும்..

சினிமாவில் வெற்றி, பணம் தந்தாலும் அந்த போதையில் ஆடக்கூடாது.. வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும்.. ஆனால் அதீத ஆர்வம், அதீத எண்ணம் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். எனவே சினிமாவுக்கு வரும் இன்றைய இளைஞர்களுக்கு அபிநய் மிகச்சிறந்த உதாரணம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+