“நான் நாயுடு பையன்” பார்த்திபன் சர்ச்சை பேச்சு! தமிழ்நாட்டில் அப்படி பேசினீங்களே? இரட்டை வேடமா? கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பார்த்திபன் பேசின ஒரு வரி தற்போது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. உஸ்தாத் பகத் சிங் படத்தின் வெளியீட்டு முன் விழா ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது பார்த்திபன் கூறிய விஷயமே தற்போது விவாதமாக மாறியுள்ளது.

Parthiban Trisha Vijay

மேடையில் பார்த்திபன் பேசியது

மேடையில் பேச அழைக்கப்பட்ட பார்த்திபன், "முதலில் என்னைப்பற்றி ஒரு சின்ன அறிமுகம்" என்று தொடங்கினார். "நான் பார்த்திபன்... ராதாகிருஷ்ணன் பார்த்திபன்... ஒரு நாயுடு பையன். ஆமாம், ஒரு நாயுடு பையன்தான். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு அவ்வளவாக வராது. தமிழ்தான் எனக்கு இயல்பாக வரும் மொழி.

அடுத்த முறை நாம் சந்திக்கும்போது, இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்திப்போம். அப்போது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன் என்று இந்த மூர்த்தி உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மூர்த்திதான் எனது இயற்பெயர்," என்று கூறினார். இந்த பேச்சில் அவர் தனது சாதியை குறிப்பிட்டதே சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

இரட்டை பேச்சு

இந்த வீடியோ வெளியானதும், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். தமிழ்நாட்டில் இருக்கும்போது திராவிட சிந்தனை, சாதி எதிர்ப்பு பற்றி பேசும் சிலர், வெளியே சென்றதும் சாதி பெருமை பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

"இது நேரடியாக இரட்டை வேடம்" என்றும், "சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேச்சை மாற்றிக்கொள்வது சரியா?" என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

பழைய பேச்சுகள் தோண்டி எடுப்பு

இந்த சர்ச்சைக்கு இடையே, முன்னதாகவே பார்த்திபன் சாதிக்கு எதிராக பேசிய வீடியோக்களையும் சிலர் பகிர ஆரம்பித்துள்ளனர். அதோடு, "அப்படின்னா இப்போ சொல்வது உண்மையா? இல்ல அப்போ சொன்னதுதானா உண்மை?" என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சிலர், இந்த பேச்சின் போது தமிழர்களைப் பற்றி மரியாதைக்குறைவாக பேசினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

வைரலாகும் வீடியோ

பார்த்திபன் தனது சாதியை குறிப்பிட்டு பேசிய அந்த வீடியோ பகுதி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "இந்த மாதிரி பேச்சுகளால்தான் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகிறது" என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பே சர்ச்சையில் இருந்த பார்த்திபன்

இந்த விவகாரம் மட்டும் இல்லாமல், சமீபத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் குறித்து பேசியதாலும் பார்த்திபன் சர்ச்சையில் சிக்கியிருந்தார். விஜய் உடன் ஒரு நிகழ்ச்சியில் திரிஷா கலந்து கொண்டதை குறித்து பேசும்போது, "குந்தவை வீட்டில் இருப்பதுதான் நல்லது, வெளியே வந்தால் பிரச்சனை வரும்" என்று அவர் கூறியிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த கருத்துக்கும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு சாதாரண அறிமுக பேச்சு... ஆனால் அதில் வந்த ஒரு வரி... அது தற்போது பெரிய விவாதமாக மாறி, பார்த்திபன் மீது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அவர் நேரடியாக விளக்கம் அளிப்பாரா என்பது தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+