வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த்
சென்னை: நடிகர் பிரசாந்த் சமீபத்தில் ஒரு வீடியோவில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசும் போது, "வாழ்க்கையில் எல்லாமே சுலபமில்லை... சில நேரங்களில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களே நம்மை உடைத்து விடும்" என்ற மாதிரி எமோஷனல் வார்த்தைகள் ரசிகர்களை பாதித்திருக்கின்றன. இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.

நடிகர் பிரசாந்த் ஆரம்ப காலம்
90களில் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக இருந்தவர் தான் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜனின் மகனாக பிறந்த இவர், மிக இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமானார். அப்பாவின் வழிகாட்டுதலோடு வந்தாலும், தனியாகவே தனது திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்தார். அந்த காலத்தில் காதல், குடும்பம் போன்ற படங்களில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
பிரசாந்த் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்
அவருடைய சினிமா பயணம் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்ததால், "டாப் ஸ்டார்" என்ற பெயரையும் பெற்றார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள், குறிப்பாக திருமண வாழ்க்கை சம்பந்தமான சிக்கல்கள், அவரது கேரியரையே பாதித்ததாக சொல்லப்படுகிறது.
நடிகர் பிரசாந்த் திருமணம்
2005ஆம் ஆண்டு பிரசாந்த், கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். ஆனால் திருமண வாழ்க்கை மிகவும் குறுகிய காலத்திலேயே சிக்கலில் சிக்கியது. பின்னர், மனைவி முன்பே திருமணம் செய்து கொண்டதை மறைத்தது போன்ற காரணங்களால் இந்த திருமணம் முறியடிக்கப்பட்டது. நீதிமன்றமும் இந்த திருமணத்தை செல்லாததாக அறிவித்து, விவாகரத்தையும் வழங்கியது.
இந்த விவாகரத்து சம்பவம் அவரது வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகள் தனிமையாக இருந்த அவர், மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், முழுமையாக சினிமாவிலேயே கவனம் செலுத்தினார்.
பிரசாந்த் கம்பேக்
அவரது கேரியரில் ஒரு கட்டத்தில் பெரிய இடைவெளியும் ஏற்பட்டது. வாய்ப்புகள் குறைந்தது, மார்க்கெட்டும் சரிந்தது. ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்க முயன்றார். குறிப்பாக 'அந்தகன்' படம் மூலம் அவர் மீண்டும் கவனம் ஈர்த்தார்.
சமீப காலங்களில், பிரசாந்த் மீண்டும் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நீண்ட காலம் தனியாக இருந்த பிறகு, வாழ்க்கையில் புதிய தொடக்கத்திற்குத் தயாராகி வருகிறார் என்றும் அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
நடிகர் பிரசாந்த் எமோஷனல் வீடியோ
இந்த அனைத்து அனுபவங்களையும் கடந்தவர் தான் இப்போது அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசும் போது, வாழ்க்கையின் கஷ்டங்களை நேரடியாக உணர்த்தும் விதமாக பேசுகிறார். அவர் சொன்ன அந்த சில வார்த்தைகள், "நாம் எதிர்பாராத விஷயங்களே நம்மை மாற்றி விடும். வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுவோம் ஆனாலும் பரவாயில்லை அதிலிருந்த மைனஸ்சை புரிந்துகொண்டு நாம் வாழ்க்கையில் மேலே வர வேண்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
ஒரு காலத்தில் டாப் ஹீரோ... அதன் பிறகு சரிவுகள்... தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோதனைகள்... மீண்டும் எழ முயற்சி - இந்த எல்லாவற்றையும் கடந்து வந்த பிரசாந்தின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications