ஜார்ஜின் போட்டோவுக்கு கண்ணீர் முத்தம் தந்த நடிகர் ரவிச்சந்திரன்! மகனை ஆசையுடன் தொட்டு பார்த்த அப்பா
சென்னை: "என்னுடைய அம்மா செம்மீன் ஷீலா என்பதையும், அப்பா நடிகர் ரவிச்சந்திரன் என்பதையும் நான் எங்கும் வெளியே சொல்லிக் கொண்டது கிடையாது. இருவரும் சினிமாவில் இருந்தாலும், நமக்கென தனி அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் எங்கும் இவர்களுடைய மகன் என்று சொன்னதில்லை என்று நடிகர் ஜார்ஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் ஜார்ஜ் பற்றி பேசியுள்ளார்..
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கௌரி கல்யாணம்' என்ற படத்தில் ஜெயலலிதா, ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்திருந்தனர், ஷீலா அந்த படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தின்போதுதான், ரவிச்சந்திரன், ஷீலாவுக்குள் ஏற்பட்ட அறிமுகம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பிறகு கல்யாணத்தில் முடிந்தது..

அந்த நேரத்தில் இந்த திருமணம் சர்ச்சையாக பேசப்பட்டது.. காரணம், ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே விமலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தனர்.. அப்படியிருந்தும் ஷீலாவை திருமணம் செய்து கொண்டது அக்காலத்தில் பெரிய சர்ச்சையாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் சில காலம் மிகவும் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர். இவர்களுக்கு பிறந்தவர்தான் ஜார்ஜ்... பிறகு ரவிச்சந்திரன், ஷீலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருமே நிரந்தரமாக பிரிந்துவிட்டனர்.. அதனால் ஷீலாவிடம்தான் வளர்ந்தார்..
நடிகர் ஜார்ஜ்
இதற்கு பிறகுதான் படங்களில் நடிக்க வந்தார் ஜார்ஜ்.. 'காதல் ரோஜா' படத்தில் முதலில் நடிகர் பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் 'ஜீன்ஸ்' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டதால் புதிய நாயகனை தேடியபோது, ஜார்ஜ் ஒப்பந்தமானார்... நன்றாக நடித்து தந்தார்.. நன்றாக ஒத்துழைப்பும் தந்தார்..
ஜார்ஜ் அப்படியே அவரது அப்பா ரவிச்சந்திரன் போலவே ஸ்டைலாகவும், சிவப்பாகவும் இருப்பார்.. 'இளவேனில் இது வைகாசி மாதம்' போன்ற பாடல்களில் அப்படியே ரவிச்சந்திரனின் மேனரிசங்கள் ஜார்ஜிடம் தெரிந்தன.
ஊட்டி பண்ணை வீட்டில் விருந்து
ஜார்ஜ் அந்த முதல் அட்வான்ஸ் செக் வாங்கியதுமே அன்று கிறிஸ்மஸ் பண்டிகையாகும்.. அதனால் அன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பெரிய விருந்து அளித்தார்.
அதேபோல ஊட்டியில் நடிகை ஷீலாவுக்கு பண்ணை வீடு உள்ளது.. 15 நாட்கள் ஷூட்டிங் அங்கு நடந்ததால், ஊட்டி பண்ணை வீட்டில் படக்குழுவினர் சுமார் 80 பேருக்கும் பிரம்மாண்டமான விருந்து அளித்தார் தந்தார் ஷீலா.. அந்த நாளை எங்களால் மறக்கவே முடியாது..
மகன் ஜார்ஜ்ஆனால், இளையராஜா பாடல்கள் இருந்தும்கூட காதல் ரோஜாவே படம் சரியாக போகவில்லை.. அதற்கு பிறகு பெரிதாக சினிமா வாய்ப்பும் ஜார்ஜூக்கு கிடைக்கவில்லை.. நாங்கள் ஏற்கனவே விஷ்ணு என்ற படத்தை தயாரித்து வெற்றி பெற்றிருந்ததால், ஜார்ஜூக்கு விஷ்ணு என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றி வைத்தோம். டைட்டிலில் அப்படித்தான் பெயர் வரும். ஆனால் படம் ஓடாததால், ஜார்ஜ் என்றே தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்.
போட்டோவை பார்த்து கண்ணீர் - முத்தம்
ஆனால் அந்த படத்தின் ரிலீசின்போது நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.. தன்னுடைய மகன் ஜார்ஜ், 'காதல் ரோஜா' படத்தில் நடிக்கிறார் என்ற விஷயம் ரவிச்சந்திரனுக்கு தெரிந்திருந்தது..
ஒரு நாள் காலை 11.30 மணிக்கு, நடிகர் ரவிச்சந்திரன் எதிர்பாராத விதமாக என்னுடைய அப்பா தயாரிப்பாளர் பாஸ்கரின் ஆபீசுக்கு வந்தார்.. காரணம், என்னுடைய அப்பாவும் நண்பர்கள்.
என் அப்பாவிடம், "எனக்கு என் பையனைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு, அவன் எப்படி இருக்கான்னு ஆல்பமாவது காட்ட முடியுமா?" என்று கேட்டார்.. அப்போதெல்லாம் சினிமாவுக்காகவும், கன்ட்டியூனிட்டிக்காகவும் பெரிய போட்டோ ஆல்பங்கள் போடுவார்கள்.. அதனால் காதல் ரோஜா படத்தின் 3 பெரிய ஆல்பங்களை ரவிச்சந்திரனிடம் எடுத்து தந்தார் என்னுடைய அப்பா..
அப்பா பாசம் - ரத்த பாசம்
அதில், தன்னுடைய 22 வயது மகன் ஜார்ஜின் போட்டோவை ஒவ்வொன்றாகப் பார்த்த ரவிச்சந்திரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. போட்டோவில் உள்ள மகனின் முகத்தை தடவி பார்த்து, அதற்கு முத்தம் தந்தார்..
என்னதான் தம்பதி பிரிந்து வாழ்ந்தாலும், குழந்தை மீதான "ரத்த பாசம்" என்பது பிரிக்க முடியாது.. ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் பாசத்திற்கு இணையாக ஒரு தந்தைக்கும் பாசம் உண்டு என்பது அப்போது புரிந்தது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications