Dushara Vijayan: சொந்த ஊரு திண்டுக்கல்லில் விவசாயம் செய்யும் நடிகை துஷாரா விஜயன்.. பஞ்ச் டயலாக் தான் செம!
சென்னை: கதாநாயகியாகவும், தங்கச்சி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை துஷாரா விஜயன் (Tamil actress Dushara Vijayan) தன்னுடைய சொந்த ஊரான திண்டுக்கல்லில் விவசாயத்தில் இறங்கி இருக்கிறார். சினிமாவில் கிளாமர் போட்டோ சூட் மட்டுமல்ல எனக்கு நம்ம ஊரு நம்ம மக்களை எப்படி மறக்க முடியும் என்று இவர் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இனி உள்ள காலத்தில் விவசாயம் எல்லாம் செய்வாங்களா? அப்படி செய்கிறவர்களை பார்ப்பதற்கே வியப்பாக இருக்குமே, அதில் லாபம் கிடைக்காது, கௌரவ கொறச்சல் என்று இப்போதுள்ள தலைமுறைகள் யோசிக்கலாம். ஆனால் அந்த விவசாயம் இல்லை என்றால் நாளைக்கு நமக்கு சாப்பாடு கிடையாது என்பது பலருக்கும் புரியாத கதையாக தான் இருக்கிறது.

விவசாயத்தை விட்டு விட்டு நாம டிப் டாப்பாக உடை அணிந்து வேலை செய்யும் வேலைக்கே போய்விடலாம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் ஒரு சிலர் இயற்கை விவசாயத்தின் அருமையை இப்போது புரிய தொடங்கிவிட்டனர். அதனாலயே வீட்டில் கிடைக்கும் சின்ன சின்ன இடங்களிலும் கூட இயற்கையான உணவுப் பொருட்களை விளைவிக்க தொடங்கி விட்டனர்.
அதிக மகசூல் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களும், ரசாயனமும் உடலுக்கு பெரிதாக பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் நம்முடைய குடும்பத்துக்கு தகுந்த மாதிரி நம்முடைய வீட்டிலேயே விவசாயத்தை செய்து விடுவோம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலருக்கு அது சாத்திய படுகிறது இன்னும் ஒரு சிலருக்கு இடப்பற்றாக்குறை மற்றும் பராமரிக்க முடியாத நிலை காரணமாக அது கனவாக தான் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை துஷாரா இப்போது தன்னுடைய சொந்த ஊரான வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்திற்கு போயிருக்கிறார். அங்கு போய் ஸ்ட்ரைட்டா தன்னுடைய ஃபார்ம் ஹவுஸில் செட்டில் ஆகி பண்ணை வீட்டில் உள்ள விவசாய வேலைகளை எல்லாம் செய்து இருக்கிறார். டிராக்டர் ஓட்டி, ஏர் உழுது பக்கத்தில் இருக்கும் செடிகளுக்கு களை வெட்டி.. சுத்தம் பண்ணி அங்கேயே ஜாலியாக விளையாடிக் கொண்டும் இருக்கிறார்.
நான் ஒரு சிட்டி கேர்ள் இல்ல நம்ம ஊரு பொண்ணு என்று மண்வாசனையோடு அவர் வேலை பார்த்த வீடியோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு அவர் போட்ட கேப்ஷன் தான் வைரல். சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா? என்று அவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த ஒரு வரி போதுமே ரசிகர்களுக்கு ஸ்டேட் ஆக கனெக்ட் ஆக..

அதனால் ரசிகர்கள், நீங்க எவ்வளவு உயரத்துக்கு போனாலும் உங்களுடைய ரூட்டை மறக்கல என்று பல கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய சொந்த ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியையும் துஷாரா நேரில் போய் பார்த்து இருக்கிறார். அப்போது அங்கு எடுத்த வீடியோக்களையும் ஷேர் பண்ணி இருக்கிறார்.
மண் மணக்கும் கிராமத்து திருவிழா, மக்கள் கொண்டாட்டம் என இவருடைய இன்னொரு முகத்தை பார்க்கும்போது துஷாராவிற்கு சொந்த ஊர் திண்டுக்கல் தானா? அவர் தமிழ் பொண்ணுதானா? என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர். துஷாரா விஜயன் ஆரம்பத்தில் ஃபேஷனிங் படித்தவர்தான். அவருக்கு அவ்வளவு ஈஸியா சினிமாவுக்கு என்ட்ரி கிடைக்கல.
2019ல் "போதை ஏறி புத்தி மாறி" படத்துல அறிமுகமானாலும் அவருக்கு பெரிய டேர்னிக் பாய்ண்ட் கிடைத்தது 2021ல் வந்த சார்பட்டா பரம்பரை படம் தான். அந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வந்து இந்த பொண்ணு நல்லா நடிக்குது என எல்லாருடைய கவனத்தை பெற்றுவிட்டார். அதற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்திலும், 2024 இல் தனுஷ் நடித்த ராயன் படத்தில் அவருடைய தங்கச்சியாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் வேட்டையன், அடுத்ததாக விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ஒரு சில படங்களில் அவருடைய கேரக்டர் இறப்பது போலவும் அல்லது அவருக்கு பாலியல் தொந்தரவுகள் நடப்பது போலவும் கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் இனி அவர் கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்கள்.
ஆனால் துஷாராவை நம்பி முதலில் பெரிய வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் பா ரஞ்சித் தான். அவருக்கு ஆரம்பத்தில் இவங்க நடிப்பாங்களா? என்று டவுட்டு இருந்ததாம். ஆனால் ஷூட்டிங் போக போக துஷாராவின் டெடிகேஷன் பார்த்து இந்த பொண்ணு சீரியஸ் பர்பாமர் என்று ரஞ்சித் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். என்னதான் நடிப்பு ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரையும் நான் மறக்க மாட்டேன் அங்கேதான் எனக்கு நிம்மதி இருக்கு என்று துஷாரா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications