நடிகை சுனைந்தாவின் வருங்கால கணவர் இந்த பிரபலம் தானா? கொச்சியில் நடந்த பங்க்ஷன்! சோசியல் மீடியாவில் கலக்கல்
சென்னை: சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரக இன்ஃப்ளுவன்சர் காலித் அல் அமேரி, தனது பிறந்தநாளை விசேஷமாக கொண்டாடி இருக்கிறார் அந்த கொண்டாட்டத்தில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த பிறந்தநாள் பங்க்ஷனில் தான் சமந்தாவின் வருங்கால கணவர் யார் என்று தகவலும் வெளியாகி இருக்கிறது.

கொச்சியில் நடந்த ஸ்பெஷல் பார்ட்டி
கொச்சியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை காலித் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவற்றில் இரண்டு குறிப்பிட்ட படங்களே தற்போது ரசிகர்களிடையே பெரிய பேச்சுப்பொருளாகி வருகின்றன. ஒரு படத்தில் காலித்தும் நடிகை சுனைனாவும் கை கோர்த்தபடி நிற்பது போன்ற நெருக்கமான தருணம் காணப்படுகிறது. மற்றொரு படத்தில் அவர்களின் கைகளின் கிளோஸ்-அப் ஷாட்டே பதிவாகியுள்ளது. இந்த இரண்டு படங்களும் வெளியானவுடனே "இவர்கள் உறவை உறுதிப்படுத்தியதாகவே தெரிகிறது!" என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்
பிறந்தநாள் விழாவில் காலித் வெட்டிய கேக்-அதை சுனைனாவே ஆர்டர் செய்ததாகவும், அந்த கேக் புகைப்படத்தை அவர் ஸ்டோரியில் பகிர்ந்ததாகவும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் இருவரின் நெருக்கம் குறித்து இதுவரை இருந்த சந்தேகம் மேலும் பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சுனைனா மற்றும் காலித் அல் அமேரி காதலில் இருப்பதாகவே ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர். காரணம் சுனைனா ஒருவரின் கையை பிடித்த புகைப்படத்தை பகிர, அதற்கு காலித் லைக் செய்தது, பின்னர் அதே படத்தை காலித் தன் பக்கத்திலும் பகிர்ந்து "Alhamdulillah" என்று குறிப்பிட்டது...
இதை எல்லாம் இணைந்து பார்த்த ரசிகர்கள், "இவர்கள் இருவரும் ஜோடி என்பதில் சந்தேகமே இல்லை" என்று நீண்ட நாட்களாக நம்பி வந்தனர். இந்த ஊகங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோதுதான், சுனைனா தன் இன்ஸ்டாவில்,"எனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி."
என்று குறிப்பிட்டார்.
ஆனால் வருங்கால கணவர் யார்? என்ற முக்கிய கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தார். இப்போது காலித் தனது புகைப்படங்களை வெளியிட்டதோடு, அந்த புதிர் ரசிகர்கள் பார்வையில் தீர்ந்துவிட்டதாகத் தெரிகிறது.
காலித் அல் அமேரி - யார் இவர்
காலித்க்கு இன்ஸ்டாகிராமில் 3.2 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இவர் சமீபத்தில் இந்தியாவில் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார் அது குறித்து கூட வீடியோக்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. முதல் மனைவி சலாமா முகமது, அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். காலித் தன்னுடைய முதல் மனைவியோடு 2024 பிப்ரவரியில் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சியில் நடந்த இந்த பிறந்தநாள் பார்ட்டி ஒரே இரவில் இரண்டு நாடுகளில் ட்ரெண்டானது-அமீரகத்தில் 'யார் இந்த சுனைனா?' என்ற கேள்வியுடன், தமிழ்நாட்டில் 'காலித் அல் அமேரி யார்?' என்ற தேடலும் அதிகரித்து வருகிறது. இருவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது மட்டும் தான் இப்போது ரசிகர்களின் ஆவலான காத்திருப்பு!












Click it and Unblock the Notifications