அம்பிகாவுக்கும் அந்த நடிகருக்கும் எழுந்த கல்யாண கிசுகிசு.. ஹீரோக்களுக்கு சமமான ரசிகர்களை பெற்ற நடிகை
சென்னை: சினிமாவில் நடிப்பது என்பது சமூகத்தில் ஒரு கேவலமான விஷயமாக கருதப்பட்டது. இதனால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் சினிமாவுக்கு வர தயங்கினார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே டி.ஆர். ராஜகுமாரியை தவிர, தமிழில் நாயகிகளாக நடித்த பெரும்பாலானோர் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவிலிருந்து வந்தவர்கள்தான்" என்று பேட்டி ஒன்றில் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
The Whistle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், நடிகை அம்பிகா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்...

ஆரம்பத்தில் அங்கு ஒரு சாதாரண நடிகையாகவே இருந்தார்.. எதிர்பாராத கவர்ச்சி, ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.. பிறகு நல்ல நல்ல கேரக்டர்களில் மலையாளத்தில் நடித்தார்
வெள்ளை ரோஜா - அடையாளம்
தமிழில் 'வெள்ளை ரோஜா' திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. முக்கியமாக, கமல்ஹாசனுடன் நடித்த 'சகலகலா வல்லவன்' படம் அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. ரஜினிகாந்துடன் 'படிக்காதவன்', 'மிஸ்டர் பாரத்' போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்..
நடிகர் பிரபுவுக்கும் அம்பிகாவுக்கும் திருமணம் வரை பேச்சுவார்த்தை என்றெல்லாம் அன்றைய காலகட்டத்தில் கிசுகிசுக்கள் அதிகமாக வந்தன.. இந்த விவகாரம் அன்று பெரிய ரகளையாகிவிட்டது.. இவர்களை பிரிக்கவே 'வாழ்க்கை' படத்தில் அம்பிகாவுக்கு ஜோடியாக சிவாஜி கணேசன் நடித்ததாகவும் சொல்வார்கள். ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அலைகள் ஓய்வதில்லை - அம்பிகா
டைரக்டர் பாரதிராஜா தனது 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்காக முதலில் அம்பிகாவைத்தான் தேர்வு செய்தார். அதற்கு பிறகு ராதாவின் போட்டோக்களை பார்த்ததும், அந்த பள்ளிக்கூட கேரக்டருக்கு ராதாவே பொருத்தமாக இருப்பார் என்று அவரை மாற்றினார்.
அலைகள் ஓய்வதில்லை படம் படு ஹிட்டாகிவிட்டது.. அமிதாப் பச்சன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு ராதாவுக்கு வந்தது.. நடிகை ராதா பாலிவுட்டில் நடிகர் ஜிதேந்திராவுடன் இணைந்து பல இந்திப் படங்களில் நடித்தார்..
ராதா இந்தியில் நடித்தாலும், அங்கு மீனாட்சி சேஷாத்திரி போன்ற நடிகைகள் பெற்ற மிகப்பெரிய இடத்தையோ அல்லது தமிழ் சினிமாவில் அவருக்கு இருந்த அதே அளவிலான புகழையோ பாலிவுட்டில் பெற முடியவில்லை..
நடிகைகளுக்கு அரசு நிலம்
ஹேமமாலினி, வைஜெயந்தி மாலா போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்ற தென்னிந்திய நடிகைகளுக்கு இந்தித் திரையுலகில் பெரிய அளவில் பாப்புலாரிட்டி கிடைப்பதில்லை..
அம்பிகா, ராதா இருவருமே தமிழ் திரையுலகில்தான் அதிகம் பாப்புலர் ஆனார்கள்.. இவர்கள் இருவருமே எம்ஜிஆருடன் நடித்ததில்லை.. ஆனாலும் சென்னையில் உள்ள அரசு நிலத்தை இவர்களுக்கு எம்ஜிஆர் வழங்கினார்.. தமிழ்நாட்டு நிலத்தை கேரள நடிகைகளுக்கு வழங்கியது அன்றைய அரசியலில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியது.. ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் அந்த இடம் இன்றும் உள்ளது..
1988-க்கு பிறகு அம்பிகாவின் மார்க்கெட் குறைய தொடங்கியது.. அந்த காலகட்டத்தில் சினிமா வாய்ப்புகளுக்காக நடிகர் வடிவேலுவிடம் சான்ஸ் கேட்டதாகவும் சொல்வார்கள். இப்போது சினிமா வாழ்வு முடிந்துவிட்டது.. பொது விவகாரங்களில் தலையிட்டு வருகிறார்.. சமீபத்தில்கூட தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில் அம்பிகா கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்..
மலையாள நடிகைகளின் ஆதிக்கம்
80 மற்றும் 90-களில் மலையாள நடிகைகளை தமிழ் ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொண்டனர். அப்போது மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பது என்பது சமூகத்தில் ஒரு கேவலமான விஷயமாக கருதப்பட்டது. இதனால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் சினிமாவுக்கு வரத் தயங்கினார்கள். ஆரம்பகாலத்திலிருந்தே டி.ஆர். ராஜகுமாரியைத் தவிர, தமிழில் நாயகிகளாக நடித்த பெரும்பாலானோர் அஞ்சலி தேவி, எம்.வி. ராஜம்மா போன்றோர் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவிலிருந்து வந்தவர்கள்தான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications