“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்!
சென்னை: "கருப்பு படம்" தமிழ் சினிமாவில் புதுமையான கதையுடன் வரவிருக்கும் படங்களில் ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் இந்த படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் திரிஷா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஆனந்தி பகிர்ந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யார் இந்த ஆனந்தி?
ஆனந்தி அஜய் சின்னத்திரையில் இருந்து வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு ஜோடி நம்பர் 1, Mr & Mrs கில்லாடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது டான்ஸ் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.
2017ஆம் ஆண்டு அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதோடு, தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை நடத்தி தனது திறமையை காட்டியுள்ளார். சினிமாவிலும் தனது தடத்தை பதித்துள்ளார். தாரை தப்பட்டை, வாலு, ரௌத்திரம், டமால் டுமீல், மீகாமன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், ராஜபார்வை, அம்மன் போன்ற சீரியல்களிலும் நடித்தவர்.
ஆனந்தி சொன்ன அதிர்ச்சி சம்பவம்
'கருப்பு' படத்தில், நடிகர் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கிறாராம். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, தன்னுடைய காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாம்.
ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவை சந்தித்தபோது, "படத்தில் நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் போயிடுச்சு... நீங்க நடித்த சீன்ஸ்கூட வரும்னு சொல்ல முடியாது" என்று நேரடியாக சொல்லிவிட்டார்களாம்.
இது சினிமாவில் சாதாரணம்
இதுபற்றி பேசும் போது, ஆனந்தி மிகவும் இயல்பாகவே இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார். சினிமாவில் இப்படியான விஷயங்கள் நடப்பது புதிதல்ல என்றாலும், "சிலர் சொல்லவே மாட்டாங்க... நாம நடித்த காட்சி இருக்கா இல்லையா என்று முதல் நாள் தியேட்டர்ல தான் தெரியும்" என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், படம் வெளியாகும் முன்பே நேரடியாக சொல்லியிருப்பதே பெரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரலான ஒரு வரி
இந்த சம்பவத்தை சிரிப்புடன் எடுத்துக்கொண்ட ஆனந்தி, "இந்த படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் கூட விலகிட்டாரு... அப்படியிருக்க நான் எம்மாத்திரம்!" என்று கேஷுவலாக பேசியிருக்கிறார்.
முன்னதாக இந்த படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தமாகி இருந்த நிலையில், பின்னர் அவர் விலகியதும் பெரிய பேசுபொருளாக இருந்தது. தற்போது சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
'கருப்பு' - என்ன ஸ்பெஷல்?
'கருப்பு' படம் சமூக பின்னணியுடன் கூடிய ஒரு தீவிரமான கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதும், ஆர்.ஜே. பாலாஜி இயக்குவது கூட இந்த படத்தின் முக்கிய ஹைலைட்ஸ். ஏற்கனவே வெளியான பாடல்கள், குறிப்பாக 'காட் மோட்' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு நடிகைக்கு தனது காட்சிகள் நீக்கப்படுவது வருத்தமான விஷயமாக இருந்தாலும், அதை இலகுவாக எடுத்துக்கொண்ட விதம் ஆனந்திக்கு பாராட்டுகளை பெற்றுத்தருகிறது. சினிமாவில் எது நடந்தாலும் அது இறுதி வரை உறுதி இல்லை என்பதற்கு 'கருப்பு' பட அனுபவம் ஒரு எடுத்துக்காட்டு. இப்போது ரசிகர்கள் காத்திருப்பது - படம் வெளியான பிறகு ஆனந்தியின் காட்சிகள் இருக்குமா இல்லையா என்பதையே!
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications