Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுந்தர் சி Thalaivar 173 பட விலகலுக்கு இதுதான் காரணமா? மறைக்கப்பட்ட உண்மை.. சமாதானப் பேச்சு ஆரம்பம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 173 படத்தை சுந்தர் சி. இயக்குகிறார், நானும், இன்பன் உதயநிதியும் சேர்ந்து தயாரிக்கிறோம் என்று கடந்த 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால், தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டார் சுந்தர் சி... இது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில பிரபலங்கள் அதுகுறித்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பிரமாண்டமாக இல்லாமல், அடிதடி இல்லாமல், சந்திரமுகி போல லைட்டர் வெயிட் கதையில் நடிக்க விரும்புவதாக கமலிடம் சொல்லி பிரியப்பட்டுள்ளார் ரஜினி. அதற்கு கமல், சுந்தர் சியை வைத்து எடுக்க சொல்லலாமா? என்று கேட்டுள்ளார்..

Sundar C Thalaivar 173 173

அருணாசலம் படம் அன்று ஹிட்டானாலும், இன்று புது இயக்குனர்களுடன் பணிபுரிந்து வரும் நிலையில், சுந்தர் சி டைரக்ட் செய்வது தற்போதைய மார்க்கெட் சூழலில் சரியாக இருக்குமா? என்ற எண்ணம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இரட்டை மனப்பான்மையுடன், ஒப்புக்கொண்டு, சுந்தர் சியிடம் கதை கேட்டுள்ளார்.

இரட்டை மனப்பான்மை

ஆனால், அந்த கதை ரஜினிக்கு திருப்திகரமாக இல்லை போலும்.. இதை கமலிடம் ரஜினி வெளிப்படுத்தவும், கமல் இதனை சுந்தர்சியிடமே சொல்லி, வேறு கதையை பார்க்க சொல்லி உள்ளார்.

அப்படியானால் கமல் சொல்லித்தான் தன்னிடம் ரஜினி கதை கேட்டுள்ளார், முழு மனதுடன் தன் படத்தில் நடிக்க ரஜினி விரும்பவில்லை போலும், எனவே இப்போதே இதிலிருந்து கவுரவமாக விலகி கொள்ளலாம் என்ற முடிவுக்கு சுந்தர் சி வந்ததாக தெரிகிறது.

எனவே கமலிடம் இதுகுறித்து ஆலோசனை செய்துவிட்டு, ரஜினியிடமும் கமல் மூலமாக இதை தெரியப்படுத்திவிட்டு, அதற்கு பிறகே அந்த புராஜெக்ட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கதை தலையீடு அதிகம்?

அதுமட்டுமல்ல, கூலி படத்தின்போது கதை தலையீடு அதிகமாகவே இருந்துள்ளது. இதனால் ரஜினி, லோகேஷூக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளும் இருந்துள்ளன.. இதையெல்லாம் சுந்தர் சி யோசித்து பார்த்திருக்கலாம்..

அன்று அருணாசலம் எடுத்த காலகட்டத்தில், சோஷியல் மீடியா கிடையாது. ஆனால் இன்று ரஜினியை வைத்து படம் எடுக்கும்போது, கதை தலையீடுகள் நடந்து, அந்த படம் சரியாக போகாவிட்டால், தான் டிரோல் செய்யப்பட்டு விடுவோம், இதனால் அடுத்து இயக்குவதற்கு படங்கள் கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணமும் சுந்தர் சிக்கு ஏற்பட்டிருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

குஷ்பு, ரஜினி, கமல், சுந்தர் சி.

அதேபோல Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "அறிக்கை வந்ததுமே அரை மணி நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறது..

இத்தனைக்கும் தான் தற்போது இயக்கியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இதுவரை எடுத்த அளவுக்கு ரஜினிக்கு போட்டு காண்பித்துள்ளார் சுந்தர் சி.. ரஜினியும் அந்த படத்தை பார்த்து வியந்துள்ளார்.. எப்போதுமே சுந்தர் சி சர்ச்சையில் சிக்காத கலகலப்பான நபர்.. ரஜினி, கமலை வைத்தும் இதற்கு முன்பு சுந்தர் சி படம் எடுத்திருப்பதால் இந்த காம்போ புதுசு கிடையாது..

அப்படியிருக்கும்போது, எதனால் வெளியேறினார் என்று தெரியவில்லை. இதை அறிவிக்காமலேயே இருந்திருக்கலாம். இதன்மூலம் அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு இருப்பதாக தெரிகிறது.

மூக்குத்தி அம்மன் 2

சுந்தர் சி-யை வைத்து கலகலப்பான படம் ஒன்றை உடனடியாக செய்ய வேண்டும் என்று ரஜினி நினைத்தார்.. மேலும் சுந்தர் சி வேகமாக படம் எடுத்து முடிக்கக்கூடியவர்.. 40 நாட்களுக்குள் படத்தை முடித்து, மினிமம் கியாரண்டி தரக்கூடியவரும்கூட.. அதற்காக உள்ளே கொண்டுவரப்பட்டவர்தான் சுந்தர் சி. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

ஆனால் , அடுத்த படத்தில் சுந்தர் சி பிசியாகிவிடுவார்.. இன்னும் மூக்குத்தி அம்மன் பட வேலைகள் மிச்சமுள்ள நிலையில், அதை முடித்துவிட்டு, விஷால் படத்தை இயக்க சென்றுவிடுவார்.. அதேபோல ரஜினியும் வேறொரு இயக்குனரை பார்த்து அடுத்த படத்துக்கு தயாராகிவிடுவார். மற்றபடி இதில் பெரிய குழப்பம் எதுவும் இருக்க போவதில்லை.

மனக்கசப்பு - சமாதானம்

அதேசமயம், மனக்கசப்பு காரணமாக சுந்தர் சி வெளியேறி இருந்தால், அது தொடர்பாக பேசி சமாதானம் செய்து, மறுபடியும் சுந்தர் சியை உள்ளே கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.. ஏனென்றால் இது உடனே முடிந்துவிடக்கூடிய விஷயம் இல்லை. எங்கோ ஓரிடத்தில் பர்ஸ்ட்-அவுட் ஆகியிருக்கிறார். அதை உடனே வெளிப்படுத்தியும் உள்ளார்..

இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டதுமே குஷ்பு அதை டெலிட் செய்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு சமாதான பேச்சுவார்த்தை அங்கே நடக்கிறது என்றுதானே அர்த்தம்?" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+