நடிகையின் பின்னாடியே போய் வாலாட்டிய ஆபாச நபர்.. அடுத்த நொடியே உடைந்த மண்டை.. யார் பாருங்க
சென்னை: நடிகைகள் சிலர், தங்கள் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்கள்.. அந்த வகையில், பிரபல நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் தந்துள்ள ஒரு பேட்டியில், தனக்கு நேர்ந்த ஈவ்-டீசிங் கொடுமை பற்றி விவரித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அந்த கொடுமையை எப்படி எதிர்கொண்டார் என்பதையும் சொல்லி, பெண்கள் அநீதியைக் கண்டு அமைதியாக இருக்கக் கூடாது என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்..
கன்னட படமான 'முகில்பேட்டை' மூலம் அறிமுகமானவர் கயாடு லோஹர்.. தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

நடிகை கயாடு லோஹர்
அதர்வா முரளிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக போகிறது.. மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் நடித்த பள்ளிச்சட்டம்பி படம், கமர்ஷியலாக வெற்றியை பெறவில்லை என்றாலும், அவரது நடிப்பு மல்லுவுட்டில் பாராட்டப்பட்டது.. இப்போதைக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் டைரக்ஷனில், துருவ் விக்ரம் நடிக்கும் "மஞ்சணத்தி" படத்திலும்,வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் கமிட் ஆகியிருக்கிறார்.
சமீபத்தில் கயாடு லோஹர் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், தனது பள்ளிப் பருவ அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.. "நான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞன் என்னையே பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான்... தினமும் நான் ஸ்கூலுக்கு சென்றாலே, என் பின்னாடியே வந்துவிடுவான்.
எல்லை மீறிய ஆபாச நபர்
முதல் 2 நாட்கள் அவனது செய்கையை தவிர்த்து கடந்து சென்றேன். ஆனால், 3ம் நாள் அவன் எல்லையைக் கடந்து அநாகரிகமாக நடந்துகொள்ள முயன்றான். அவன் செய்த அந்த செயல் எனக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. இனியும் பொறுமையாக இருக்கக் கூடாது, இப்படியே விட்டால் இதைவிட மோசமான செய்கையை செய்துவிடுவான் என்று நினைத்தேன்.
அதனால் கொஞ்சமும் யோசிக்காமல் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் மேலேயே வீசியெறிந்தேன்.. இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. நான் எதை பற்றியும் கவலைப்படாமல், திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.
துணிச்சலுடன் போராடணும்
பார்ப்பதற்கு அமைதியானவர்களாக நினைப்பவர்கள் முன்னிலையில் தவறு நடந்தால் பெண்கள் அமைதியாக இருக்கக் கூடாது, யார் தவறு செய்தாலும் அதைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்து ஒரு முன்னணி நடிகை, தனக்கு நேர்ந்த கொடுமைக்குத் தானே கல்லை எடுத்துத் தலையை உடைத்ததாக பேசியுள்ள இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது..!!!












Click it and Unblock the Notifications