ராகவா லாரன்ஸ் அறிவிப்பை கலாய்த்த ப்ளூசட்டை மாறன்... ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! வெடித்த விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், டான்ஸ் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்த நாள் முதல், அவர் எந்தக் கட்சியில் இணையப் போகிறார், முதல் தேர்தலிலேயே போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. குறிப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் லாரன்ஸ் களமிறங்கப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லாரன்ஸ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

Raghava Lawrence Blue Sattai Maran

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ

அந்த வீடியோவில் பேசிய அவர், "திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது தர்மமாக இருக்காது. இத்தனை ஆண்டுகளாக விஜய் சாருக்காக உழைத்த தொண்டர்கள் இருக்கும்போது, நான் இப்போது கட்சியில் சேர்ந்த உடனே சீட் வாங்குவது சரியல்ல. முதலில் ஒரு சாதாரண உறுப்பினராக வேலை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பொறுப்புகள் வர வேண்டும்" என்று கூறினார்.

அதே நேரத்தில், "திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்றுதான் சொன்னேன். அதற்காக வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் இரண்டு படங்களை முடித்துவிட்டு, எந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை அறிவிப்பேன்" என்றும் அவர் கூறினார்.

ப்ளூ சட்டைமாறன் பதிவு

லாரன்ஸின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருந்த நேரத்தில், அதை கிண்டல் செய்யும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

லாரன்ஸ், "திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை" என்று கூறிய செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், அதற்கு ஒரே வரியாக "ஆசிய கண்டம் அதிர்ச்சி!" என்று பதிவிட்டுள்ளார். வழக்கம்போல அவரது இந்த நக்கல் பதிவு சில நிமிடங்களிலேயே வைரலாகி, இணையத்தில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சிலர், "லாரன்ஸ் சொன்ன சாதாரண விளக்கத்தையே இப்படி கலாய்க்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர், "ப்ளூ சட்டை மாறன் பாணியே இதுதான். எந்த விஷயத்தையும் நக்கலாக சொல்லிவிடுவார்" என்று அவரது பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பான பல விஷயங்களில் ப்ளூ சட்டை மாறன் இதேபோல் நையாண்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த முறையும் லாரன்ஸின் அரசியல் விளக்கத்தை அவர் கலாய்த்த விதம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மறுபக்கம், லாரன்ஸின் அரசியல் பயணம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. விஜய்யின் வெற்றிக்குப் பிறகு நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சு அதிகரித்துள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் எந்தக் கட்சியில் இணையப் போகிறார்? எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்? என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+