ராணிப்பேட்டை அருகே 2 வயது குழந்தையின் தந்தையின் வயிற்றில் ஏறிய பஸ்.. ஒரு நொடி தவறுதான்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 2 வயது குழந்தையின் தந்தை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகளில் திடீரென பிரேக் போடும்போதோ அல்லது பேருந்து உரசிச் செல்லும்போதோ, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் நிலைதடுமாறி சாலையின் நடுவே விழ அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி விழும்போது பின்னால் வரும் பேருந்தின் பின்சக்கரம் அவர்கள் மீது ஏறிவிடும் சம்பவம் நடக்கிறது. அப்படித்தான் சரத்துக்கு விபத்து நடந்திருக்கிறது.

சென்னை -பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் வேகமாக செல்லும் பேருந்துகள், திடீரென விபத்தில் சிக்குவது நடக்கிறது. குறிப்பாக குறிப்பிட்ட நேரத்தில் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களால் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில நொடிகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது அல்லது ஒரு சில வினாடிகள் வாகனங்களின் கட்டுப்பாட்டை ஓட்டிவந்தவர் இழக்கும் போது, பின்னால் வந்தவர் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருக்கிறது. அப்படியான விபத்து தான் நடந்துள்ளது. விரிவாக பார்ப்போம்.

In Ranipet the father of a two-year-old child lost his life due to a split-second mistake

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சீனிவாசபேட்டை பகுதியை சேர்ந்த சரத்(எ) ஷாம் (31 திருமால்பூர் கிராமத்திலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் இருசக்கர வாகனத்தில் அதே சாலையில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து சரத் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது..

இந்த விபத்தில் வாகனத்தில் பின்புறமாக அமர்ந்திருந்த சரத்தின் வயிற்று அடிப்பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் பலத்த ரத்த காயமடைந்தவரை அங்கிருந்த பொதுமக்கள் போலீசார் உடனடியாக அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார், சாலையில் உயிரிழந்த சரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்துக்கான காரணம் குறித்தும் அதேபோல் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர் மேலும் உயிரிழந்த சரத் என்பவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளதாகவும் இளம் வயதிலேயே சரத் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+