சாவின் விளிம்பு வரை போயாச்சு.. நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் தப்பியது எப்படி? வீடியோ பாருங்க
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையால் கடல் கொந்தளித்தது. இதில் மீன்பிடி படகு சேதமடைந்த நிலையில் 6 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். இந்த வேளையில் இந்திய கடற்படையை சேர்ந்த சாச்செட் கப்பல் சென்று 6 பேரையும் பத்திரமாக மீட்டு வந்தது.

இதுதொடர்பாக இந்திய கடலோர காவல்படை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோ மட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளது. அதில், ''மங்களூர் கடலில் ஜுன் 29ம் தேதி மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்திய மீன்பிடி படகு மஞ்சு மாதா கப்பல் சேதமடைந்தது.
Swift #SearchAndRescue by @IndiaCoastGuard Ship #Sachet off Mangaluru, saved six lives. After IFB Manju Matha suffered hull damage and flooding in rough seas on 29 Jun 26, all survivors were rescued using remote-operated lifebuoys.
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 30, 2026
Survivors are being brought to #NewMangalore… pic.twitter.com/5UcZKMrY0F
இதில் கடலில் தத்தளித்த 6 மீனவர்களை மீட்கும் வகையில் இந்திய கடலோர காவல்படை கப்பல் 'சாச்செட்' தனது தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொண்டு அனைவரையும் மீட்டது. மீட்கப்பட்டவர்கள் கப்பல் மூலமாக புதிய மங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உயிர்களும் முக்கியம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications