ரிப்போர்ட் அனுப்புங்க.. நாடு முழுக்க அரசு ஊழியர்களின் தரவுகளை திரட்ட மத்திய அரசு முடிவு.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க மத்திய அரசு ஊழியர்களின் தரவுகளை திரட்ட மத்திய அரசின் கமிஷன் முடிவு செய்துள்ளது. 8வது மத்திய ஊதியக்குழு கமிஷன் சார்பாக நாடு முழுக்க இதற்காக நோட்டிபிகேஷன் அனுப்பப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முறைகளை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட 8வது மத்திய ஊதியக்குழு (8th CPC), தற்போது தனது தரவு சேகரிப்பு பணிகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த குழு ஊழியர்களின் கடந்த 3 வருட டேட்டாவை கேட்டுள்ளது.

pay commission

அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அடுக்கு நிலை 1 முதல் நிலை 18 வரை (Level 1 to Level 18) உள்ள அனைத்து ஊழியர்களின் விவரங்களும், இடைநிலை அடுக்குகளான 5A, 10A, 10B, 12A, 12B, 13A மற்றும் 13B உட்பட தனித்தனியாகக் கோரப்பட்டுள்ளன. ஆனால் இதை கேட்பதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளது.

8வது மத்திய ஊதியக்குழு (8th CPC)

இதை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் சென்னையில் வேலை பார்க்கிறீர்கள் என்றால்.. கடந்த 3 வருடங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகள் அனைத்தையும், உங்கள் பின்னணி அனைத்தையும் உங்கள் மேனேஜர் ரிப்போர்ட்டாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட முன்பணங்கள் (Employee Advances) குறித்த விரிவான விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

எப்படி அனுப்ப வேண்டும்?

ஆனால் ஊழியர் ஒருவரின் ரிப்போர்ட்டை அனுப்ப நிறைய விதிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளன. அவ்வளவு எளிதாக ரிப்போர்டுகளை அழித்துவிட முடியாது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள '8CPC ஆன்லைன் தரவு போர்டல்' (8CPC Online Data Portal) வழியாக மட்டுமே இந்த விவரங்களை பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழுதான் அரசு ஊழியர்கள் வாங்கப்போகும் புதிய சம்பளத்தை முடிவு செய்யும். அதாவது 8வது ஊதியக்குழுதான் புதிய வருமான அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும்.

ரிப்போர்ட் மிகவும் முக்கியமானது

இதனால் அவர்கள் கேட்கும் இந்த ரிப்போர்ட் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தத் தரவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2026 (இன்று) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடைவதால், இந்த பணிகள் இன்றிரவுக்குள் நிறைவடையும் அல்லது தேவைப்பட்டால் ஊதியக்குழு கால நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக அறிக்கை கேட்கிறது

ஊதியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களுக்கு விரிவான நிதித் தரவுகள் தேவைப்படுவதால், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆன்லைன் போர்டல் மூலமாக மட்டுமே விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் கடிதங்கள், எக்செல் ஷீட்டுகள் (Excel sheets), மின்னஞ்சல் (Email) அல்லது எந்தவொரு ஆஃப்லைன் (Offline) வடிவிலும் அனுப்பப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மறுத்துள்ளது. மத்திய அரசு முழுவதும் உள்ள நிதித் தகவல்களை துல்லியமாகவும், சீராகவும் ஆய்வு செய்யவே இந்த டிஜிட்டல் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த முன்பண விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன?

கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2022-23, 2023-24 மற்றும் 2024-25) ஒவ்வொரு சம்பள அடுக்கிலும் உள்ள ஊழியர்கள் பெற்ற பின்வரும் முன்பண விவரங்கள் லட்ச ரூபாயில் (in lakh of rupees) சமர்ப்பிக்கப்பட வேண்டும்:

தனிநபர் கணினி வாங்குவதற்காக கேட்கப்பட்ட முன்பணம்

வீடு கட்ட கேட்கப்பட்ட முன்பணம்

இதர தகுதியான முன்பணங்கள்

மொத்த முன்பணங்களின் கூட்டுத்தொகை (Total Advances)

பொது வைப்பு நிதி (GPF), விடுப்பு பயணச் சலுகை (LTC) மற்றும் பயண முன்பணங்கள் (Travel Advance) ஆகியவற்றுக்கான தரவுகள் தனியாக சேகரிக்கப்படுவதால், இந்த படிவத்தில் அவை தவிர்க்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+