சொல்லி அடிக்கும் சிம்மம், கன்னி ராசி.. ஜூலை மாதத்தில் இந்த விஷயத்தில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். அனுகூலம் காணப்படும். பிள்ளைகளிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் சந்தோஷம் ஏற்பட்டாலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம். ஏதோ ஒரு நெருடல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

rasi-palan-the-miracle-awaiting-simmam-kanni-rasi-people-in-the-next-15-days-full-predictions-for

விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். ஹார்மோன் குறைபாடுகள், மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் பற்றி வெளியில் பேசாமல் இருப்பது நன்மையைத் தரும். தேவையில்லாத நட்பால் பிரச்சனைகள் வரும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

உறவுக்குள் யாரிடத்தில் பேசினாலும் அவர்களிடம் அமைதி காப்பது நல்லது. உறவை பேணிக் காப்பது நன்மையைத் தரும். அரசுத் துறை, அரசியல்வாதிகள், பெரிய நிர்வாகம் நடத்துபவர்கள், பெரிய நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அரசாங்கத்தை நம்பி தொழிலில் இருப்பவர்களுக்கு பெண்டிங், பணவரவு கிடைக்கும். பதட்டத்தைத் தவிர்ப்பது நல்லது. உறவுமுறையில் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு திடீரென வயிறு சார்ந்த பிரச்சனைகளால் மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதயத்தை பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றங்கள் ஏற்படும். மகான்கள் வழிபாடு வாழ்க்கையை மாற்றிக் கொடுக்கும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து ஏற்றம் காணப்படும். சுபகாரியங்கள் உண்டாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் நல்ல காலகட்டம். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது நெருடல் இருந்தால் அதனை சரிசெய்து கொள்வது நல்லது. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. துணையின் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். படிக்கட்டுகள், உயரமான இடங்கள், வாகனங்களில் கவனம் தேவை. தேவையில்லாத பதட்டத்தை தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+