மிதுனம், கடக ராசிக்கு ஜூலை மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்?.. 2 விஷயம் முக்கியம்.. முழு பலன்கள் இதோ
ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மிதுனம் மற்றும் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியினர் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் உடனிருப்பவர்கள், மேலதிகாரிகளிடம் தர்க்கம், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் வரும் 15 ஆம் தேதி வரை அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

யாராவது உங்களைப் பற்றி சொன்னாலும் வருத்தப்படாமல் இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், படிப்பு ரீதியாக இழுபறியாக இருந்த சிக்கல்களை தீர்த்துக் கொள்வது சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எல்லா விஷயத்திலும் பொறுமை, அமைதி காப்பது நன்மையைத் தரும். நரம்பு, கண், ரத்த அழுத்தம், இதயத்தில் பாதிப்பு இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் அள்ளித் தரும்.
கடக ராசி பலன்
வார்த்தைகளால் நிறைய விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாரைப் பற்றியும் கேலி, கிண்டல் செய்வது, தவறாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு காணப்படும் வாய்ப்புள்ளதால் அவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் காணப்படும்.
யோக பலன்கள்
துணை விஷயத்தில் இருந்து வந்த மன தாங்கள்கள் தீரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். சந்தோஷங்கள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகம். யோக பலன்கள் உங்களுக்கு அதிகளவில் கிடைக்கும். அடுத்தடுத்து சுபகாரியம் நடக்கக்கூடிய யோகங்கள் உண்டாகும்.
வழிபாடு
சிவன் வழிபாடு, சிவனுக்கு நல்லெண்ணெய், வில்வம் கொடுப்பது, அருகம்புல் விநாயகருக்கு கொடுப்பது நன்மையைத் தரும். சைனஸ், ஒற்றை தலைவலி, தலைசுற்றல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு முதுகு தண்டுவடப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய விஷயங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தும். வார்த்தையால் கெடுத்துக் கொள்ளாமல் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நன்மையைத் தரும்.
முன்னேற்றம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் பரிபூரணமாக நீங்கும்.












Click it and Unblock the Notifications