உல்லாசமாக சுற்றிய பெங்களூரு ஜோடி.. உடனே பாய்ந்த போலீஸ்.. நீதிபதி நாகபிரசன்னா என்ன செய்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரு காதல் ஜோடி ஒன்று உல்லாசமாக சுற்றித் திரிந்தது.. ஒருகட்டத்தில் எல்லையும் மீறியது.. ஆனால், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது மட்டும் புகார் கிளம்பியது.. இது கர்நாடகா ஹைகோர்ட்டிலும் எதிரொலித்தது.. கடைசியில் நீதிபதி என்ன தீர்ப்பு சொன்னார் தெரியுமா? இதுதான் மிகப்பெரிய கவனத்தையும், சோஷியல் மீடியாவின் கவனத்தையும் பெற்று வருகிறது.

பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், தனுஷ் என்ற 19 வயது இளைஞரும் ஒருவரையொருவர் மனதார விரும்பி காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த விஷயம் பெண்ணின் வீட்டாருக்குத் தெரிந்து விட்டது. உடனே வழக்கம்போல சமூக மற்றும் குடும்ப எதிர்ப்புகள் கிளம்பின.

Bengaluru Couple

பெங்களூரு காதல் ஜோடி

இதற்கு நடுவில் காதலர்களுக்குள்ளேயே ஏதோ கருத்து வேறுபாட்டால் தகராறு வந்துவிட்டது. அதனால் 2 பேருமே பிரிந்துவிட்டதாக தெரிகிறது..

இந்நிலையில், குடும்பத்தினர் தந்த அழுத்தம் காரணமாக அந்த இளம்பெண், தனுஷ் மீது கே.ஆர்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்தார்.. தனுஷ் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசாரும் எப்ஐஆர் பதிவு செய்து, தனுஷையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பலாத்கார வழக்கு

இப்போது தனுஷ் வீட்டில் கொந்தளித்து விட்டார்கள்.. தன் மகன் மீது போடப்பட்ட இந்த வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரி, தனுஷின் பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் அந்த 19 வயது இளம்பெண்ணும் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதியிடம் பேசிய அந்த பெண், "நாங்கள் 2 பேரும் ஒருவரையொருவர் விரும்பிதான் காதலித்தோம்.. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தோம்.. அதனால்தான் இருவரும் முழு சம்மதத்துடன்தான் உடலுறவு வைத்தோம்" என்றார்.

நீதிபதி நாகபிரசன்னா அதிரடி தீர்ப்பு

இதைக்கேட்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா தனது தீர்ப்பில் சொன்னதாவது, "சட்டம் என்பது எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய எளிய மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தின் எதிர்பார்ப்புகளையோ அல்லது சமூகத்தின் ஒப்புதலையோ பெறாத ஒரே காரணத்திற்காக, இருவருக்குள்ளும் இருக்கும் பரஸ்பர அன்பையும் காதலையும் குற்றமாக்குவதற்கான ஒரு ஆயுதமாக சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.

19 வயது இளைஞர் வெளியில் எதிர்கொள்ளும் சவால்களை விட மிக மோசமான ஆபத்துகளைச் சிறைக்குள் எதிர்கொள்ள நேரிடும். பரஸ்பர சம்மதத்துடன் காதலிப்பதை ஒருபோதும் பலாத்காரக் குற்றமாக மாற்ற முடியாது.

பரஸ்பர உறவு எப்படி பலாத்காரம் ஆகும்?

இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் எந்தவொரு வற்புறுத்தலோ, மிரட்டலோ அல்லது பாலியல் வன்கொடுமையோ நடந்ததற்கான எந்தவொரு முதற்கட்ட ஆதாரமும் இல்லை. இது முழுக்க முழுக்க இரு தரப்புச் சம்மதத்துடன் கூடிய ஒரு காதல் உறவு என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் தனுஷ் மீது கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பலாத்கார வழக்கை முழுமையாக ரத்து செய்கிறேன்.

மேலும், சிறையிலிருக்கும் தனுஷை எந்தவித தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்காக, இந்த உத்தரவு நகலை உடனடியாக மின்னஞ்சல் (E-mail) மூலமாகவே சிறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

காதலுக்கு ஆதரவாகவும், குடும்பத்தின் விருப்பத்திற்காக சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+