குருவின் அருளால் ஜாக்பாட் அடிக்கப்போவது யாரு?.. துலாம், விருச்சிகம் ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அற்புதமான காலகட்டமாக இருக்கும். குலதெய்வத்தை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். தொழிலில் வரும் மாற்றங்களை எடுத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். வார்த்தைகளில் அதீத கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இயக்குவது நன்மையைத் தரும்.
நம்பிக்கை
ஏற்றங்களும், நம்பிக்கையும் காணப்படும் நல்ல காலகட்டம். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்படு நன்மையைத் தரும். முருகருக்கு தினந்தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்வது கஷ்டத்தை தீர்க்கும். உறவுகளிம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அலர்ஜி, ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பண வரவு உண்டாகும். நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினர் பெருமாள் வழிபாடு செய்வது, மந்திரத்தை ஜெபிப்பது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையோடு இருக்கக்கூடிய விருச்சிக ராசியினருக்கு தேவையில்லாத பிரச்சனை, சங்கடங்கள் நிவர்த்தியாகும். உறவுமுறையில் காணப்பட்டிருந்த சிக்கல் தரும்.
பயணம்
பயணங்கள் வந்தால் எடுத்துக் கொள்வது நல்லது. நிறைய நல்ல காரியங்கள் குருவின் அருளால் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம்.
செல்வாக்கு
இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நிறைய விஷயங்கள் நடைபெறும். பெற்றோர் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது, குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தப் பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குரு பார்வை
புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனம் தேவை. சோஷியல் மீடியா, செல்போன் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவணி மாதம் வரை கவனமாக இருப்பது நன்மையையும், சந்தோஷத்தையும் தரும். நல்ல காரியங்கள் அணிவகுத்து ஏற்படும் நல்ல அமைப்பு உள்ளது. பூர்வ புண்ணியத்தை குரு பார்ப்பதாலும், 9 ஆம் இடத்திலும் குரு பார்ப்பதால் எல்லா விஷயத்திலும் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல் தீரும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications