ஆஷா போஸ்லே… லதா மங்கேஷ்கர் குரலும், ஆர்.டி.பர்மன் இசையும் சேர்ந்து உருவாக்கிய அந்த மாயம்! நெகிழ்ச்சி பின்னணி
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று (ஏப்ரல் 12) உடல்நலக் குறைபாடு காரணமாக 92 வயதில் காலமானார். பத்மபூஷன் முதல் கின்னஸ் சாதனை வரை ஏராளமான விருதுகளை பெற்ற அவர் மறைவு, இசை உலகுக்கு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியுடன், அவரும் அவரது அக்கா லதா மங்கேஷ்கர்வும் சேர்ந்து எழுதிய அந்த அற்புதமான இசை பயணமும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

இசையிலேயே வளர்ந்த குடும்பம்
லதாவும் ஆஷாவும் சாதாரண குடும்பம் அல்ல. அவர்களுடைய அப்பா தீனநாத் மங்கேஷ்கர் ஒரு பெரிய இசைக்கலைஞர். வீட்டிலேயே இசை தான் தினசரி வாழ்க்கை.
அப்பா மறைந்த பிறகு, வீட்டுப் பொறுப்பை லதா சின்ன வயதிலேயே ஏற்றுக்கொண்டார். தன்னுடன் தங்கை ஆஷாவையும் இசை உலகில் கொண்டு வந்தார். பின்னர் ஹ்ரிதய்நாத் மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், மீனா மங்கேஷ்கர் ஆகியோரும் இந்த இசைப் பயணத்தில் இணைந்தார்கள்.
ஒரே வீட்டில் இரண்டு ஸ்டைல்
லதா என்றால் மென்மை. அமைதியான, மனசை தொட்ட பாடல்கள். ஆஷா என்றால், சுறுசுறுப்பு. வேகமான, ஸ்டைல் நிறைந்த பாடல்கள். ஒரே வீட்டில் வளர்ந்தாலும், பாடலில் இருவரும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். அதுதான் இவர்களின் பெரிய பலம்.
ஒரு கட்டத்தில் சில மனஸ்தாபங்களால் ஆஷா குடும்பத்திலிருந்து விலகி இருந்தார். அதனால் இருவருக்கும் இடையில் கொஞ்சம் தூரம் வந்தது. ஆனா கொஞ்ச நாட்கள் போன பிறகு, அந்த தூரம் குறைந்து, மீண்டும் அக்கா-தங்கை சேர்ந்துவிட்டார்கள்.
இரண்டு குரல்களையும் இணைத்த ஆர்.டி பர்மன்
இந்த இரண்டு குரல்களையும் சரியாக பயன்படுத்தியவர் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். ஆஷாவுடன் அவர் பின்னர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து நிறைய புதுமையான பாடல்களை கொடுத்தார்கள். இப்போ கூட அந்த பாடல்கள் கேட்டா பிரஷ்ஷாக தான் இருக்கும். அதே நேரத்தில், லதாவுடனும் அவர் பல மென்மையான, மனதை வருடும் பாடல்களை உருவாக்கினார்.
போட்டி
லதா, ஆஷா இருவருக்கும் போட்டி இருந்தது உண்மைதான். ஆனா அது ஒருத்தரை இன்னொருத்தர் கீழே இழுக்குற மாதிரி இல்லை. ஒருத்தர் நல்லா பாடினா, இன்னொருத்தர் அதைப் பாராட்டுவாங்க. அந்த நல்ல போட்டிதான் இருவரையும் இவ்வளவு உயரத்துக்கு கொண்டு போய்ச் சேர்ந்தது.
இன்னும் வாழும் குரல்கள்
லதாவும் ஆஷாவும் இரண்டு விதமான குரல்கள். ஆனா இருவரும் சேர்ந்து இந்திய இசைக்கு ஒரு புதிய அடையாளம் கொடுத்தவர்கள். அவர்களை இணைத்த ஆர்.டி.பர்மன் இந்த மூவரின் கூட்டணி தான் இந்தி திரையிசையின் பொற்காலம் என்று சொல்லலாம்.
மொத்தத்தில், ஒரே குடும்பத்தில் இருந்து வந்த இரண்டு குரல்கள்... இன்று உலகமே கேட்கும் அளவுக்கு உயர்ந்தது ஒரு பெரிய விஷயம். அவர்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் பாடல்கள் எப்போதும் நம்மோடு இருக்கும்.
-
மறக்க முடியாத பாடகி ஆஷா போஸ்லே.. பிரபல பாடல்களை ஷேர் செய்து போற்றும் தமிழ் ரசிகர்கள் -
90 வயதிலும் 3 மணி நேரம் இசை கச்சேரி நடத்திய ஆஷா போஸ்லேவுக்கு மும்பை மருத்துவமனையில் நடந்தது என்ன? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications