பாரதிராஜாவின் ராசியில்லாத ஹீரோ இவரா? "ரா" எழுத்து நடிகை.. செண்ட்டிமென்ட்டை தகர்த்த கிளாசிக் டைரக்டர்
சென்னை: பாரதிராஜா தற்போது நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவருடன் இருந்து கண்காணித்து வருகிறோம், அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.. இந்நிலையில் பாரதிராஜாவின் திறமைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா சேனல் ஒன்றில் பெருமைபட பேசியிருக்கிறார்.
Aadukalam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "16 வயதினிலே, டீன்-ஏஜ் பருவ மாற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.. இளம் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மன தடுமாற்றங்கள், பருவ கோளாறுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்..

ஸ்டுடியோவிற்குள்ளேயே கிராமத்து செட் போட்டு படம் எடுத்த காலத்தை மாற்றி, முதன்முதலில் நிஜமான கிராமங்களுக்கே சென்று படம் எடுத்தவர் பாரதிராஜா..
தொழில்நுட்பம் மற்றும் இசை
சிவப்பு ரோஜாக்கள் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த கிரைம் த்ரில்லர் படமாகும்,.. முதல் மரியாதை வயது வித்தியாசத்தை கடந்த காதலை மிகவும் கண்ணியமாகச் சொன்ன படமாகும்.. கருத்தம்மா: பெண் சிசுக்கொலைக்கு எதிரான சமூக மாற்றத்தை பேசிய படமாகும்..
கிழக்கே போகும் ரயில் சுதாகரையும், புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜையும் அறிமுகப்படுத்தியவர்.. பாரதிராஜா கதாநாயகனாக நடித்த ஒரே படம் கல்லுக்குள் ஈரம், ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.. ஆனால் வித்தியாசமான படம்..
ரிஸ்க் எடுத்த பாரதிராஜா
அபூர்வ ராகங்கள் படத்தில் பாலச்சந்தர் ஒரு ரிஸ்க் எடுத்தார்.. மகன் அம்மாவை விரும்புவது போலவும், மகள் அப்பாவை விரும்புவது போலவும் கண்ணாடி பாத்திரத்தை கையிலேந்துவது போல கஷ்டமான படத்தை எடுத்திருந்தார்.. அதுபோல மகள் வயது பெண் விரும்புவது போல முதல் மரியாதை படத்தை பாரதிராஜா எடுத்திருந்தார்.. கொஞ்சமும் ஸ்லிப் ஆகாமல் படத்தை எடுத்திருந்த திறமைசாலி பாரதிராஜா.
கிரைம் த்ரில்லர் படங்களுக்கு இலக்கணமாக இவரது சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் இன்றும் கருதப்படுகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு அதே பாணியில் இந்தியாவிலும், ஏன் வேற்று மொழிகளிலும் கூடப் பல படங்கள் எடுக்கப்பட்டன..
அதுமட்டுமல்ல, இளையராஜா இல்லாமல் பாரதிராஜா படம் ஓடாது என்ற பிம்பத்தை உடைத்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தார் பாரதிராஜா. குறிப்பாக வைரமுத்து மற்றும் ரஹ்மானுடன் இணைந்து அவர் கொடுத்த பாடல்கள் வேறொரு பரிமாணத்தில் இருந்தன.
R பெயர் சென்டிமென்ட்
இவர் அறிமுகப்படுத்தும் நாயகிகளின் பெயர்களை 'R' என்ற எழுத்தில் தொடங்குமாறு அதாவது ராதிகா, ராதா, ரேவதி, ரேகா என மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.. இது ஒருவகை சென்டிமென்ட் காரணமாக இருக்கலாம்.. மணிரத்னம், மணிவண்ணன் போன்ற பல லெஜெண்ட் இயக்குனர்கள் இவரது 'பயிற்சிப் பட்டறையில்' இருந்து வந்தவர்களே.
மகன் மனோஜை 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் ஒரு பெரிய ஹீரோவாகக் கொண்டு வர வேண்டும் என்பது பாரதிராஜாவின் மிகப்பெரிய கனவாக இருந்தது, ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது..
நடிகர்கள் - ராசியில்லை?
பாரதிராஜா அறிமுகப்படுத்தும் ஹீரோக்கள் பெரிய அளவில் ஜெயிப்பதில்லை என்ற ஒரு சென்டிமென்ட் பேச்சு உண்டு.. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காரணம், பாக்யராஜ் ஹீரோவாகவும், டைரக்டராகவும் ஜொலித்தார்.. சத்யராஜ் போன்றோர் இவரிடம் இருந்து வந்து பெரிய அளவில் ஜெயித்துள்ளார்..
பாரதிராஜா ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. தான் எதிர்பார்த்த நடிப்பு வரும் வரை நடிகர்களை விடமாட்டார், சில நேரங்களில் நடிகர், நடிகைகளை கன்னத்தில் அறைந்தும் வேலை வாங்குவார் என்று சொல்வார்கள்..
பாரதிராஜா பற்றிப் பேச ஒரு நாள் போதாது.. அவர் ஒரு நடமாடும் சினிமா பல்கலைக்கழகம்.. அவர் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications