என்னய்யா இது? எம்ஜிஆர் சீனை விஜய் படத்தில் சுட்டு வச்சிருக்காங்களே! ப்ளூ சட்டை மாறன் கலாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூசட்டை மாடன் போட்ட போஸ்டர் வைத்து தான் இப்போது விஜய் படத்தை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு விஜய் படத்தை அப்பவே எம்ஜிஆர் காப்பி அடித்திருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட் இப்போ இணையத்திலும் வைரலாகி வருகிறது.

சினிமாவில் சில ஹிட் படங்களின் கதையை அப்படியே இன்னொரு சில படங்களில் பட்டி டிங்கரிங் பார்த்து வைத்திருப்பார்கள். அதை பார்த்து நாமளும் ஆகா.. ஓகோ என்று பாராட்டி இருப்போம். ஆனால் அதற்கு பிறகு தான் இது அந்த படத்தில் பார்த்த காட்சி ஆச்சே, இந்த படத்தில் பார்த்த காட்சி ஆச்சே என்று தெரியவரும். அதற்குப் பிறகு அடப்பாவிகளா இப்படியா ஏமாத்தினீங்க என்று நாம் நொந்து போய் இருப்போம்.

Vijay Blue Sattai Maran MGR

அதிலும் சிலர் தாங்கள் அடித்தது காப்பி என்று தெரியாத மாதிரியே எடுத்து வைத்திருப்பார்கள். நம்ம மொழி படத்தை பார்த்தா தானே நீங்க கண்டுபிடிப்பீங்க என்று மற்ற மொழி படங்களில் இருந்தும், மற்ற மொழி புத்தகங்களில் இருந்தும் கூட சிலர் கதையை எடுத்து வைத்திருக்கிறார்கள். இப்ப எல்லாம் தங்களுடைய கதையை இன்னொருவர் எடுத்தால் உடனே காப்பி ரைட் கேட்டு விடுகிறார்கள் ஆனால் முந்தைய காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது.

அதனாலயே எம்ஜிஆர் படத்திலிருந்து ஒரு காட்சியை நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் தூக்கி வைத்திருக்கிறார்கள். அதுவும் 1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நீதிக்குப் பின் பாசம் என்கிற படத்தில் எம்ஜிஆர் பேசிய வசனங்களைப் போலவே 2022 இல் விஜய் நடித்து வெளியான தமிழன் படத்திலும் இயக்குனர் வைத்திருக்கிறார் என்று அந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, 2022 இல் வெளியான தமிழன் படத்திலிருந்து காட்சியை 1963ல் அந்த இயக்குனர் சுட்டு படம் எடுத்திருக்கிறார் என்று நக்கல் அடித்திருக்கிறார்.

"2022-ல் வெளியான தமிழன் படத்தில் இயக்குனர் மஜீத் கஷ்டப்பட்டு உருவாக்கிய காட்சியை 1963ல் நீதிக்கு பின் பாசம் படத்தில் அப்படியே வைத்த இயக்குனர் எம். ஏ திருமுருகன் மற்றும் விஜய் நடித்த அந்த சீனில் நடித்த எம்ஜிஆர் இருவருக்கும் கண்டனங்கள்" என்று அவர் தனக்கே உரிய கிண்டலோடு ப்ளூ சட்டை மாறன் போஸ்ட் போட இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜயை பிடிக்காதவர்கள் இதை வைத்தே இப்போ ட்ரோல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+