Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஸ்டா பிரபலம் தேவா, ஜீவாவை நேரில் அழைத்த முதலமைச்சர்.. அடடா இப்படி ஒரு அட்வைஸ்! வைரல் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் சில நேரங்களில் ஒரு சிறிய வீடியோ கூட பெரிய மாற்றத்தை உருவாக்கி விடும். அதற்கே சரியான உதாரணம் தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவா.

"ஓய் செதறுதே" என்று அவர்களின் கியூட் ரியாக்ஷன்களால் ஆரம்பித்த இந்த இரண்டு சிறுவர்களின் வீடியோக்கள், இன்று தமிழகம் முழுவதும் மக்கள் கவனிக்கும்படி வளர்ந்துவிட்டது. "ஹாய்.. நான் உங்க தேவா இது என் தம்பி ஜீவா" என்று இவர்களுடைய பேவரைட் வசனம் தான் பலருக்கும் பரிச்சயம். சாதாரண ரீல்ஸ் வீடியோவாக தொடங்கிய இந்த பயணம், இப்போது பெரியவர்களையும் பிரபலங்களையும் சந்திக்கும் அளவுக்கு இவர்களை கொண்டு சென்றிருக்கிறது.

MK Stalin Deva Jeeva

முதல்வரை சந்தித்த சிறுவர்கள்

அந்த வகையில் சமீபத்தில் இந்த இரண்டு சிறுவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் (M. K. Stalin) நேரில் சந்தித்தனர். சென்னைக்கு வந்திருந்த தேவா மற்றும் ஜீவா, முதல்வரை சந்தித்த போது அங்கிருந்த சூழல் முழுக்க கலகலப்பாக மாறியது. குழந்தைகளின் இயல்பான பேச்சு, சிரிப்பு - இவை எல்லாம் அந்த சந்திப்பை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றியது.

முதலமைச்சர் அட்வைஸ்

சிறுவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பதை பாராட்டியதுடன் ஒரு முக்கியமான அறிவுரையும் கூறினார். "நீங்கள் ரீல்ஸ் செய்வது நல்ல விஷயம். ஆனால் அதே அளவுக்கு படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்லா படிச்சா போலீஸ் அதிகாரி ஆகலாம்... கலெக்டர் ஆகலாம்... பெரிய கனவுகள் எல்லாம் நிறைவேறும்" என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பேனாக்களை பரிசாகவும் வழங்கியுள்ளார். அந்த தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாதாரண ரீல்ஸிலிருந்து பிரபலங்களை சந்திக்கும் நிலை

தேவா மற்றும் ஜீவா சிறுவர்கள் முதலில் சாதாரண ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் தான் கவனம் பெற்றனர். அவர்களின் இயல்பான பேச்சு, துள்ளலான நடிப்பு - இவை எல்லாம் பார்த்தவர்களை சிரிக்க வைத்தது. அதன்பிறகு இவர்களின் வீடியோக்கள் அதிகமாக வைரலாக ஆரம்பித்தது. அதன் பிறகு பல பிரபலங்களின் கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது.

பிரபுதேவாவுடன் வீடியோ

சமீபத்தில் நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா உடன் இந்த சிறுவர்கள் வெளியிட்ட வீடியோ கூட சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டது. அந்த வீடியோவில் தேவா-ஜீவாவின் கலகலப்பான நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் "சூப்பர்" என்று பாராட்டியிருந்தனர். ஒரு காலத்தில் ரீல்ஸ் மூலம் மக்களை சிரிக்க வைத்த சிறுவர்கள் இன்று பெரிய கலைஞர்களுடன் சேர்ந்து வீடியோ செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்பதே பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அனிருத்தை சிரிக்க வைத்த வீடியோ

இதில் மிகவும் வைரலான ஒன்று - இசையமைப்பாளர் அனிருத் Anirudh Ravichander குறித்து அவர்கள் வெளியிட்ட வீடியோ தான். அந்த வீடியோவில் "அனிருத்துக்கு எங்க அண்ணன் தேவாவுக்குத்தான் போட்டி!" என்று சொல்லும் வகையில் கலகலப்பாக அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்த அனிருத் கூட அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அந்த சிறுவர்களை பாராட்டியிருந்தார். இதனால் அவர்களின் வீடியோ இன்னும் அதிகமான மக்களை சென்றடைந்தது.

பிரபலங்களின் பாராட்டு

இந்த சிறுவர்களின் திறமையை பார்த்து பல சினிமா பிரபலங்களும் நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர். நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் Raghava Lawrence அவர்களும் இந்த சிறுவர்களை சந்தித்து வாழ்த்தியுள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு மற்றும் பார்த்திபன் கூட இவர்களை நேரில் அழைத்து பாராட்டி இருக்கின்றனர்.

ஒரு ரீல்ஸ்... ஒரு பெரிய பயணம்

சாதாரணமாக ஒரு மொபைல் கேமராவில் எடுத்த சில விநாடி வீடியோ... அதுவே இன்று இந்த இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. இப்போது அவர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் இல்லாமல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரையும் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறார்கள்.

முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்த இந்த தருணம், தேவா மற்றும் ஜீவா சிறுவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நினைவாக மட்டுமல்லாமல், அவர்களின் வளர்ச்சியை காட்டும் இன்னொரு முக்கியமான படியாகவும் பார்க்கப்படுகிறது. இப்போது பலரும் சொல்லும் ஒரு விஷயம் மட்டும் தான் - "இந்த சிறுவர்களின் கனவுகள் இன்னும் பெரியதாக வளர வேண்டும்... அவர்கள் இன்னும் உயரத்திற்கு போக வேண்டும்!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+