Dhurandhar 2 Box Office: மொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்த துரந்தர் 2 வசூல்.. 24 நாளில் நடந்த அதிசயம்
சென்னை: பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் மிகப்பெரிய ஹிட் என்னன்னு கேட்டா, பலரும் தயக்கமே இல்லாமல் "துரந்தர் 2"ன்னு தான் சொல்லுவாங்க. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்த இந்த படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து தான் வேகமே வேறு லெவல்!
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாரா அர்ஜுன் கூட தன்னோட நடிப்பால் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருக்காங்க. இவரோட கேரக்டர் இந்த படத்துக்கு ஒரு தனி ஸ்ட்ரெங்க்த் மாதிரி இருந்துச்சுன்னு ரசிகர்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

கதையும், மாஸ் எலிமென்ட்ஸும்
"துரந்தர் 2" ஒரு சாதாரண ஆக்ஷன் படம் இல்ல. இதில் பவர் பாக்டான கதையும், எமோஷனும், அதோட சேர்த்து ரன்வீர் சிங்கின் மாஸ் ஸ்கிரீன் பிரசென்ஸும் செம்மையாக வேலை செய்திருக்கு. முதல் பாகத்தைக் காட்டிலும் இந்த சீக்வெல் இன்னும் பெரிய அளவுக்கு எடுத்திருப்பாங்க. ஒவ்வொரு சீனும் தியேட்டர்ல விசில் அடிக்க வைக்கும் மாதிரி அமைந்திருக்கு.
வசூலில் புதிய சாதனை
இந்த படத்தோட பாக்ஸ் ஆபிஸ் ரன் பாத்தா, ரொம்ப பேருக்கு ஆச்சரியமே ஆகுது. ரிலீஸ் ஆன 24 நாட்களுக்குள்ளே இந்தியாவில் மட்டும் ரூ.1,297.48 கோடி வசூல் பண்ணிருக்கு. அதோட சேர்த்து ஓவர்சீஸ்ல ரூ.414.50 கோடி வரையிலும் கலெக்ஷன் வந்திருக்கு. மொத்த வசூல்: ரூ.1,711.98 கோடி!
இதுல இன்னும் பெரிய விஷயம் என்னன்னா, சீனா, வளைகுடா மாதிரி பெரிய மார்க்கெட்டுல ரிலீஸ் ஆகாமலேயே இந்த அளவுக்கு வசூல் பண்ணிருக்கு. இதுவே இந்த படத்துக்கு கிடைத்துள்ள உலகளாவிய ரீச் என்ன அளவுக்கு இருக்குன்னு காட்டுது.
ரசிகர்கள் ரியாக்ஷன்
ரசிகர்கள் மத்தியில் இந்த படம் ஒரு பேவரிட் ஆகி இருக்கு. சோஷியல் மீடியால எல்லாம் "துரந்தர் 2" பற்றிய ரிவியூ, வீடியோஸ், ரியாக்ஷன்ஸ் என தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிட்டு தான் இருக்கு. குறிப்பாக ரன்வீர் சிங்கின் எனர்ஜி, ஆக்ஷன் சீன்ஸ், டயலாக்ஸ் எல்லாம் வைரலாகி இருக்கு.
வெற்றி கூட்டணி மீண்டும் ஹிட்
ஆதித்யா தார் - ரன்வீர் சிங் இந்த கூட்டணி இதுக்கு முன்னாடியே நல்ல ஹிட் கொடுத்திருந்தது. இப்போ "துரந்தர் 2" மூலம் அந்த வெற்றியை இன்னும் ஒரு லெவல் மேல எடுத்துட்டாங்கன்னு சொல்லலாம்.
மொத்தத்தில சொல்லணும்னா, "துரந்தர் 2" ஒரு சாதாரண ஹிட் படம் இல்ல... இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி. இன்னும் சில நாட்கள் இப்படியே ஓடுனா, இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனைகளில் முதல் இடத்துக்கு போகும் வாய்ப்பும் இருக்குன்னு ட்ரேட் வட்டாரங்கள் சொல்லிக்கிட்டு இருக்கு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications