Dhurandhar 2: ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ மிரட்டல் டீசர்.. மீண்டும் ஒரு மாஸ் வெற்றி? இந்த முறை கதை இதுதானா?
சென்னை: (Dhurandhar 2 teaser) இந்தி சினிமாவில் ஆக்ஷன் - ஸ்பை த்ரில்லர் வகையில் கடந்த ஆண்டு வெளியான 'துரந்தர்' படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படமாகவும் மாறியது. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படம், ரன்வீர் சிங்கை ஒரு ஸ்பை அதிகாரியாக புதிய கோணத்தில் காட்டியது.
உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன், சர்வதேச உளவு வலைப்பின்னல்கள், நெருக்கடியான மோதல்கள் என பரபரப்பான காட்சிகளால் மிரட்டிய 'துரந்தர்', ரன்வீர் சிங்கின் வெற்றியை மீண்டும் உறுதி செய்தது.

இந்தப் பெரும் வெற்றியின் தொடர்ச்சியாக, படத்தின் இரண்டாம் பாகம் 'துரந்தர் 2' அல்லது 'துரந்தர்: த ரிவெஞ்ச்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்தப் படம் இன்னும் அதிகமான ஆக்ஷன், திருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் கதையோடு உருவாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
டீசர் வெளியீடு
(Dhurandhar 2 release date) 'துரந்தர் 2' படத்தின் டீசர் இன்று மதியம் வெளியாகி உள்ளது. இந்த டீசர், ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கதை எந்த திசையில் நகரும்? ரன்வீர் சிங்கின் கேரக்டர் இந்த முறை எந்த ஆபத்தான பணியில் ஈடுபடப்போகிறது என்ற சில க்ளூவை டீசரில் காட்டி இருக்கின்றனர்.
ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தீப்பொறி பறக்கும் ஆக்ஷன் தோற்றத்தில் ரன்வீர் சிங்கை காட்டி, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 'துரந்தர்' படம் வெளியான போது, இந்திய உளவு உலகை மையமாக வைத்து உருவான கதைக்களம், ஹாலிவுட் தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகள், மற்றும் ஆதித்யா தாரின் டைரக்ஷன் ஆகியவை பாராட்டப்பட்டன.
ரன்வீர் சிங்குடன் இணைந்து, ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பு படத்தின் கதைக்கு கூடுதல் பலம் சேர்த்தது. குறிப்பாக, வில்லன் மற்றும் கிரே ஷேட் கேரக்டர்களில் வந்த நடிப்புகள் படத்தின் திரைக்கதையை மேலும் தீவிரமாக மாற்றியது.
துரந்தர் 2 பட்ஜெட்
இந்த வெற்றியின் காரணமாக, 'துரந்தர் 2' படத்திற்கான எதிர்பார்ப்பு வணிக ரீதியாகவும், கதை ரீதியாகவும் அதிகமாகியுள்ளது. முதல் பாகம் வசூலில் சாதனை படைத்ததால், இரண்டாம் பாகம் அதைவிட பெரிய அளவில் தயாரிக்கப்படுகிறது. அதிக பட்ஜெட், சர்வதேச லொகேஷன்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட ஆக்ஷன் காட்சிகள் என 'துரந்தர் 2' இன்னும் பிரமாண்டமாக உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துரந்தர் 2 ரிலீஸ் தேதி
'துரந்தர் 2' படம் மார்ச் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம், அதே நேரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் நேரடி மோதலை சந்திக்கவுள்ளது. இதனால், வட இந்திய - தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் "எந்த படம் பெரிய வசூல் சாதனை படைக்கும்?" என்ற விவாதம் இப்போதே தொடங்கியுள்ளது.
இரண்டு பெரிய ஸ்டார் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகுவதால், மார்ச் மாத பாக்ஸ் ஆபீஸ் போட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா மோதலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications