சரண்யா ரோல் நாயகனில் உருவான கதை.. படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த பெரிய நடிகராமே? : முக்தா ரவி
சென்னை: கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'நாயகன்' திரைப்படம் கடந்த 7ம் தேதி ரீ-ரிலீஸானது. இந்த படம் குறித்து முக்தா ரவி தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் விரிவாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள முக்தா பிலிம்ஸ் முக்தா ரவி, "நாயகன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் 2 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது.. ஆனால், அப்போதெல்லாம் நெகட்டிவ் பிலிம் என்பதால், பாதி பிலிம்கள் சரியாக இல்லை.. இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

குறிப்பாக, 2, 3 சீன்கள் சரியாக இல்லாததால், அவைகளை டிஜிட்டலாக மாற்றுவதற்கு கஷ்டமாகிவிட்டது.. பிறகு மலேசியா உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டலாகி மாற்றி கொண்டு வந்தனர்..
சினிமாஸ்கோப் படம்
அதேபோல 35mm சினிமாஸ்கோப் படம் என்பதால், ஃபார்மெட் மாறிவிடும்.. முகங்கள் எல்லாம் ஸ்கிரீனில் பெரிய சைஸில் தெரியும்.. இதெல்லாம் டிஜிட்டலில் சரி செய்யப்பட்டுள்ளது.. அதேபோல 5.2-ல் சவுண்டு சிஸ்டம் சிறப்பாக செய்துள்ளனர்.. அன்றைய நாயகன் படத்தில் என்னென்ன சீன்கள் இருந்ததோ, அத்தனையும் இப்போதும் குறைவின்றி கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் தியேட்டரில் நல்ல கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது.. நீதிபதி செந்தில்குமார் நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளதாகவும், காட்சி வாரியாக ஒவ்வொன்றையும் தன்னால் இப்போது சொல்ல முடியும் என்று கூறினார்
சிவாஜி கணேசன் அமலா
நாயகன் படம் உருவானதே சுவாரஸ்யம்தான்.. காட் ஃபாதர் என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியான படத்தை பார்த்துவிட்டு, அதை தமிழில் எடுக்க வேண்டும் என்று என்னுடைய சகோதரர் முக்தா சுந்தர் விருப்பப்பட்டார்.. இந்த படத்தை சிவாஜி கணேசன், கமல்ஹாசன், அமலா இவர்களை வைத்து எடுப்பதாகதான் அவர் திட்டமிட்டார். இதற்காக விளம்பரமும் செய்யப்பட்டு, சிவாஜி, அமலாவுக்கு அட்வான்சும் தந்தாகிவிட்டது.
ஆனால், சிவாஜி, கமல் இருவரும் தந்தை மகனாக நடித்தாலும், படத்தில் டாமினேஷன் செய்வது சிவாஜியாகவே இருந்திருக்கும்..ஏற்கனவே சிவாஜி கணேசன் அப்போது உச்சத்தில் இருந்த நிலையில், கமல்ஹாசன் பிரபலமாக இருந்தாலும், இன்னும் வளர்ந்து கொண்டிருந்தார். எனவே கமலுக்கான ஸ்கோப் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று என்னுடைய அப்பா நினைத்தார்..
மணிரத்னம் டைரக்டரானார்
அதனால் வேறு சில கதைகளையும் பார்த்தோம். ஆனால் அதெல்லாம் கமலுக்கு பிடிக்கவில்லை.. பிறகுதான் வரதராஜ முதலியார் பற்றின சப்ஜெக்டடை மணிரத்னம் கமலிடம் சொல்லி, எங்களிடம் சொல்ல சொன்னார்.. அந்த கதை என்னுடைய அப்பாவுக்கும் பிடித்திருந்தது..
எப்போதுமே ஒரு டைரக்டர் கதையை சொல்லும்போது, அதை அவரே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவானது.. அப்போதுவரை நாயகன் படத்தை என்னுடைய அண்ணன்தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால் மணிரத்னம் கதை சொன்னது பிடித்துவிட்டதால், அவரையே இயக்கும்படி என்னுடைய அண்ணன் சொல்லிவிட்டார். அதற்கு பிறகே மணிரத்னம், கமல்ஹாசன் காம்பினேஷனில் நாயகன் படம் உருவானது.
விபச்சாரி டூ கலெக்டர்
ஒரு விபச்சாரி படித்துவிட்டு ஐஏஎஸ் கலெக்டராவது பற்றி சரத்சந்தர் சட்டர்ஜி 1960-ல் நாவலாக எழுதியிருந்தார்,. இதிலிருந்து இன்ஸ்பியராகி எடுத்ததுதான் சரண்யாவின் கேரக்டர்.. இதை என்னுடைய அப்பா மணிரத்னத்திடம் சொல்லி பயன்படுத்தி கொள்ள சொன்னார்....
முதலில் இந்த படத்துக்கு "கதாநாயகன்" என்று பெயர் வைத்தோம்.. ஏற்கனவே அந்த பெயரில் டைட்டில் பதிவாகியிருந்ததால் நாயகன் என்று மாற்றினோம்.
தயாரிப்பு ரீதியாக சிக்கல் வந்தது.. இப்போதுள்ள பாஜக அலுவலகம் செயல்படும் கமலாலயம் எங்களுடைய வீடுதான்.. அந்த வீட்டை அடமானம் வைத்துதான் நாயகன் படத்தை எடுத்தோம் என்றெல்லாம் விரிவாக பேசியிருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications