பண்ணை வீட்டை பாடகி கெனிஷாவுக்கு தந்த ஜெயம் ரவி? உயரும் நட்சத்திர விவாகரத்துகளும், லிவிங் டூ கெதரும்
சென்னை: சினிமாவில் சட்டப்படி விவாகரத்து நடக்காமல், லிவிங் டூகெதர் நடத்துவதும் சீரழிவு கலாச்சாரமாகவே கருதப்படும்.. எந்த நடிகராக இருந்தாலும்சரி, தன்னுடைய சொந்தத்தை, பந்தத்தை, உறவை அறுத்து கொள்கிறவர்கள், மனைவி, குழந்தைகளை கவனிக்காதவர்கள், எப்படி சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்ல முடியும்? " என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Cine Corner என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், அன்பு செழியனிடம் கடன் வாங்கி, 2 படங்களை ரவி மோகன் எடுக்கப் போவதாக, திரையுலகையே திரும்பி பார்க்கவைக்கக்கூடிய நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது..

கெனிஷா - ஜெயம் ரவி
கெனிஷாவை கோவாவில் பார் சிங்கராக கெனிஷாவை சந்தித்து நட்பாகி உள்ளார் ஜெயம் ரவி.. பிறகு தன்னுடைய மனைவி ஆர்த்தி ரவி, 2 குழந்தைகளையும் பிரிந்துவிட்டார்.. ஆர்த்தி ரவி- ஜெயம் ரவி பற்றின செய்திகள் அன்று பெரிதாக பேசப்பட்டதோ, அதே அளவுக்கு ரவி மோகன் - கெனிஷா பற்றின செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.
ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆர்த்தி குடியிருந்த வீடு, ஏலத்துக்கு வந்துவிட்டது. வங்கியிலிருந்தும் நோட்டீஸ் வந்தது. ஆனால் தன்னிடம் இல்லை என்று ஜெயம் ரவி கை விரித்துவிட்டாராம்.
சர்ச்சைகளின் நாயகி
அதேபோல சில கிசுகிசுக்களும் வலம் வருகின்றன.. அதாவது கெனிஷா பெயரில் 30 கோடி ரூபாய்க்கு பண்ணை வீடு வாங்கப்பட்டுள்ளதாம். கெனிஷாவுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்திருக்கிறதாம். முதலில் சொந்த தாய் மாமனை திருமணம் செய்தார்.. ஆனால் அவர் இறந்துவிட்டார். 2வது திருமணமும் கோவாவில் நடந்துள்ளது.. அந்த கணவரும் இறந்துவிட்டார். மொத்தத்தில் சர்ச்சைகளின் நாயகியாக உள்ளார் கெனிஷா.
இன்னமும் விவாகரத்து பெறாதநிலையில், இப்போதுவரை ஆர்த்திதான் ஜெயம் ரவியின் மனைவி ஆவார்.. ஆனால் தன்னுடைய வெற்றிக்கு பின்னணியில் இருப்பது கெனிஷாதான் என்கிறார் ஜெயம் ரவி.. இப்போதெல்லாம் விவாகரத்துகள் திரைத்துறையில் சகஜமாகிவிட்டது, அதிகமாகிவிட்டன.
ஜெமினி கணேசன், கமல்ஹாசன்
அந்த காலத்தில் சினிமாவில் வெறும் கிசுகிசுக்கள்தான் வருமே தவிர, விவாகரத்துகள் குறைவு.. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி என இவர்கள் காலம்வரை எதுவுமே நடக்கவில்லை.
ஜெமினி கணேசன் 3 திருமணங்களை செய்தார்.. தன்னுடைய கடைசி காலத்திலும் ஒரு திருமணம் செய்தார்.. இதற்கு பிறகு கமல்ஹாசன் காலம் வரும்போது பெருத்த மாற்றம் தென்பட்டது. நடிகைகள் வாணி கணபதி, ஸ்ரீவித்யா, கவுதமி போன்றோரின் விவகாரங்கள் வெடித்தன.. கமலுக்கு பிறகு, அடுத்த தலைமுறை கலைஞர்களின் விவாகரத்துகள் பெருகி விட்டன.
இமான், சிவகார்த்திகேன் விவகாரமும் இப்படித்தான் சர்ச்சையானது.. ஆக, திரைத்துறையும், சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரண்டு குழந்தைகளாகிவிட்டன.. எந்த கதாநாயகர்களும், சொந்த வாழ்க்கையில் ,2, 3 கதாநாயகிகளுடன் இருக்கக்கூடாது என்பதுதான் பொதுமக்களின் விருப்பமாகும்.
இதுபோன்ற திருமணங்கள் அனைத்துமே சட்டப்பூர்வமாக இருக்காது.. சட்டத்துக்கு புறம்பாகவும், சில காலத்துக்கு பிறகு இருவருமே பிரிந்து சென்றுவிடக் கூடியதாக இருக்கும்.
லிவிங் டூகெதர் - கலாச்சார சீரழிவு
திரை உலகில் சுசித்ரா, சுசி லீக்ஸில் சொல்வதை பார்த்தால் பயமா இருக்கு.. பார்ட்டிகளில் தட்டில் வைத்து கொகைன், பிரவுன் சுகர் தருவார்களாம்.. சினிமா பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகளில் ராஜபோதை இல்லாத பார்ட்டியே கிடையாது.
அதேபோல, சட்டப்படி விவாகரத்து நடக்காமல், லிவிங் டூகெதர் நடத்துவதும் சீரழிவு கலாச்சாரம்தான்.. எந்த நடிகராக இருந்தாலும்சரி, தன்னுடைய சொந்தத்தை, பந்தத்தை, உறவை அறுத்து கொள்கிறவர்கள், மனைவி, குழந்தைகளை கவனிக்காதவர்கள், எப்படி சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்ல முடியும்? நல்ல கணவனாக, நல்ல தந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல மனிதனாக இருக்க முடியும்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications