“போராட்டம் நடத்த எங்களுக்கு ஓர் இடம் வேண்டும்”.. கரப்பான்பூச்சி கட்சியின் அபிஜித் தீப்கே வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "எங்களுக்குப் போராட்டம் நடத்த ஓர் இடம் தேவை. இங்கு முடியாவிட்டால், வேறு ஓர் இடத்தையாவது எங்களுக்கு அளிக்க வேண்டும். உணவு, மின்சாரம் மற்றும் குடிநீர் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன." என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே.

மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை எதிர்த்து சமூக வலை தளத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு கணக்கை அபிஜித் தீப்கே தொடங்கினார். இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

We Need a Place to Protest CJP Abhijit Deepke Calls for Immediate Government Action

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் திப்கே, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றும் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி வரைதான் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில், போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் போராட்டக்காரர்கள் கலையாமல் போராட்டத்தை நடத்தி வரும் டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அபிஜித் தீப்கே, என்னை போலீசார் கைது செய்யலாம் எனவும், கைது செய்தால் அறவழியில் நாடு முழ்வதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராடத்தை தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் "எங்களுக்குப் போராட்டம் நடத்த ஓர் இடம் தேவை. இங்கு முடியாவிட்டால், வேறு ஓர் இடத்தையாவது எங்களுக்கு அளிக்க வேண்டும். உணவு, மின்சாரம் மற்றும் குடிநீர் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன." என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+