Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thangar Bachan: தமிழில் மந்திரங்கள் ஓத… இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் திருமணம்.. திருப்பதியில் கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான தங்கர் பச்சான் தனது மகன் விஜித்தின் திருமணத்தை இன்று திருப்பதியில் பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடத்தினார். முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு நடைபெற்ற இந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து தங்கர் பச்சான் திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்தார். அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Director Thangar Bachan Tirupati Vijith

பாரம்பரியமும் பண்பாடும்

இன்று திருப்பதியில் நடைபெற்ற இந்த திருமணம், தமிழ் மரபுகளை மையமாகக் கொண்டு, வேத மந்திரங்களுக்கு மாற்றாக தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டு நடைபெற்றது. தங்கர் பச்சானின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்வு எளிமையுடனும் அர்த்தமுள்ள முறையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மணமக்களை வாழ்த்தியதுடன், தமிழ்பண்பாட்டை முன்னிலைப்படுத்திய இந்த முயற்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

தங்கர் பச்சான்

தங்கர் பச்சான் தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாக அறியப்படுகிறார். பார்த்திபன் நடித்த 'அழகி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' போன்ற சமூக உணர்வுள்ள திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். வாழ்க்கை, குடும்பம், மனித உறவுகள் ஆகியவற்றை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநராக தங்கர் பச்சான் பெயர் பெற்றவர்.

தங்கர்பச்சான் விஜித்

தங்கர் பச்சானின் மகனான விஜித், கடந்த 2022ஆம் ஆண்டு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையாதபோதும், விஜித்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா பிரபலங்களின் பங்கேற்பால் கவனம் பெற்றது.

விஜித் பெயர் குறித்து கூட, "விஜய் பெயரில் இருந்து 'வி' மற்றும் அஜித் பெயரில் இருந்து 'ஜித்' எடுத்தே இந்த பெயர் உருவானதா?" என அந்நிகழ்ச்சியில் சிலர் கேள்வி எழுப்பியது அப்போது பேசுபொருளானது.

சமூக வலைதளங்களில் பாராட்டு

தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு, ஆடம்பரத்தை தவிர்த்து நடைபெற்ற இந்த திருமணம், தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் பண்பாட்டை முன்னிலைப்படுத்திய தங்கர் பச்சானின் இந்த முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது.

இதன் மூலம், தங்கர் பச்சான் மீண்டும் ஒருமுறை சினிமாவைத் தாண்டி சமூக சிந்தனை கொண்ட கலைஞர் என்பதைக் நிரூபித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+