துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே
சென்னை: பாலிவுட்டில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடாக பேசப்பட்டு வந்த துரந்தர் 2 படம், (Durandar 2 Box Office Day 2) வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே வசூலில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பயன்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வலுவான ஓட்டத்தை தொடர்கிறது.

முதல் நாள் அதிரடி
மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம், முதல் நாளிலேயே சுமார் 102.55 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றது. இது சமீப காலத்தில் வெளியான பல பெரிய படங்களின் தொடக்க வசூலை விட அதிகம் என்பதால், ஆரம்பத்திலேயே படம் கவனத்தை ஈர்த்தது.
இரண்டாம் நாளில் 80.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் நாளுடன் ஒப்பிடும்போது சுமார் 21 சதவீதம் சரிவு இருந்தாலும், இது சாதாரணமான குறைவு எனவே கருதப்படுகிறது. பொதுவாக பெரிய படங்களுக்கு முதல் நாளுக்கு பிறகு வசூல் குறைவது வழக்கம் என்பதால், இந்த அளவிலான வசூல் இன்னும் வலுவானதாகவே பார்க்கப்படுகிறது.
2 நாட்களில் 226 கோடி
இந்த இரண்டு நாட்களில் இந்திய அளவில் நெட் வசூல் மட்டும் 226.27 கோடி ரூபாயை கடந்துள்ளது. உலகளவில் மொத்த வசூல் 269 கோடியை தாண்டியுள்ளது.
இதன் மூலம், துரந்தர் 2 படம் மிக வேகமாக 250 கோடி கிளப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தி மார்க்கெட் ஆதிக்கம்
இந்த படத்தின் வசூலில் ஹிந்தி பதிப்பே முக்கிய பங்காற்றியுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் சுமார் 78.94 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. அதே சமயம் மற்ற மொழிகளில் வசூல் குறைவாக இருந்தாலும், மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் மூலம், வடஇந்தியாவில் படம் மிகப்பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும், அங்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்திருப்பதும் தெளிவாகிறது.
உலகளவில் மாபெரும் ஓப்பனிங்
முதல் நாளிலேயே உலகளவில் சுமார் 236 கோடி ரூபாய் வசூல் செய்தது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்ஷன் படங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டில் இந்த படம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
சாதனைகள் முறியடிக்கும் வேகம்
வெளியான இரண்டு நாட்களிலேயே, இந்த படம் பல படங்களின் மொத்த வசூலை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான சில பெரிய படங்களின் lifetime collection-ஐ கூட இந்த படம் எளிதாக கடந்து சென்றுள்ளது. இதனால், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டாக மாறும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
படம் பற்றிய பின்னணி
துரந்தர் 2 என்பது கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான துரந்தர் படத்தின் தொடர்ச்சியாக உருவானது. முதல் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருந்தது.
இந்த படத்தை ஆதித்யா தர இயக்கியுள்ளார். ஆக்ஷன், அரசியல் பின்னணி, ரியலிஸ்டிக் காட்சிகள் ஆகியவை கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம், கதை சொல்லும் விதத்திலும் கவனம் ஈர்த்துள்ளது.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்
இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகள், செட் வேலைப்பாடுகள், பின்னணி இசை ஆகியவை படத்தின் முக்கிய பலமாக சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் கருத்து
படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நல்ல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "படம் முழுக்க ட்விஸ்ட் நிறைய இருக்கிறது", "கிளைமாக்ஸ் மிக வலுவாக உள்ளது", "ரன்வீர் சிங் நடிப்பு செம" போன்ற கருத்துகள் அதிகமாக காணப்படுகின்றன.
சிலர் படம் நீளமாக இருந்தாலும், கதை ஈர்க்கும் விதமாக இருப்பதால் சலிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளனர். மொத்தத்தில், துரந்தர் 2 படம், வசூல் மற்றும் வரவேற்பு ஆகிய இரண்டிலும் வலுவான நிலையை பதிவு செய்து வருகிறது. இந்த வேகத்தில் சென்றால், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டாக மாறும் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்பது சினிமா வட்டாரத்தின் கணிப்பு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications