தேவயானிக்கு பதிலா விஜயலட்சுமியை கூப்பிட்டு இருக்கணும்! பிரண்ட்ஸ் ரீ-ரிலீஸ் வெளியீட்டில் இயக்குநர் பேரரசு பேச்சு
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற, எவர்கிரீன் நண்பர்கள் படமான 'ஃப்ரண்ட்ஸ்', பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது! விஜய் மற்றும் சூர்யா கூட்டணியில் 2001-ல் வெளியான இந்த மெகா ஹிட் திரைப்படம், வரும் நவம்பர் 21 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இரட்டிப்பு மகிழ்ச்சி
ரசிகர்களின் இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், படக்குழு புதிய ட்ரெய்லர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளது. நண்பர்கள் உறவு, நகைச்சுவை, உணர்ச்சி போன்ற அம்சங்கள் நிறைந்த இந்தப் படம், அப்போதைய பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஹிட்டாக இருந்தது. நீண்ட நாட்களாக இருந்த ரசிகர்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளதால், #FriendsReRelease மற்றும் #VijaySuriya போன்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
பேரரசுவின் பேச்சு
இந்நிலையில், 'ஃப்ரண்ட்ஸ்' படத்தின் ரீ-ரிலீஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இயக்குநர் பேரரசு கலந்துகொண்டார். அவர் பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பேரரசு தனது பேச்சில், பிரமோஷன் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களைக் கிண்டலடித்துக் கொண்டே, படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியை அழைக்காதது குறித்துப் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு பிரமோஷனுக்காக நீங்க எங்களைக் கூப்பீட்டு இருக்கக் கூடாது." "விஜயலட்சுமியை கூப்பிட்டு இருக்கணும்": "நீங்க இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமியை கூப்பிட்டு இருக்கணும். அவங்கள கூப்பிட்டு இருந்தால் நிறைய கண்டன்ட் கிடைத்திருக்கும். இந்தத் திரைப்படத்தைப் பற்றியும் மக்கள் அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்."
"அது தெரியாமல் இந்த பிரமோஷனுக்காக ரெடி பண்ணுனவங்க வந்துட்டாங்க. தேவயானி மேடம் இந்த படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தாங்க. அவங்க இப்போ இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக வந்திருக்காங்க. ஆனா, இவங்கள விடவும் விஜயலட்சுமி மேடம் வந்து இருந்தாங்கன்னா இங்க வேற விதமா இருக்கும். இறுதியில், "அவங்களை நினைக்கும்போது ஒரு நடிகர் அண்ணன் தான் ஞாபகம் வராங்க. அதை இப்ப சொல்லவும் முடியல, சரி எனக்குச் சிரிப்பு வருது" என்று பேரரசு முடித்துக் கொண்டார்.
இணையத்தில் பரவும் கமெண்ட்ஸ்
பேரரசுவின் இந்தக் கருத்து, யாரை அவர் குறிப்பிட்டார் என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும், தமிழ் சினிமாவில் நடிகை விஜயலட்சுமி தொடர்பான சில சர்ச்சைகளையும், கிசுகிசுக்களையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது போலவே இருந்தது.
பேரரசுவின் இந்த பகீர் சிரிப்பு , விவாதம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் கன்டென்ட்டாக மாறியுள்ளது. ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கான பிரமோஷனில், இயக்குநர் பேரரசு இப்படி பேசியது, 'ஃப்ரண்ட்ஸ்' படத்திற்கு வேறுவிதமான பப்ளிசிட்டியைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இதற்கு விஜயலட்சுமி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications