அம்மாவின் வலி! இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல! நடிகர் தனுஷ் முன்பு அழுத கிரேஸ் கருணாஸ்
சென்னை: நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் தானே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள யூத் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் , இயக்குநர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அனைவரையும் அதிகமாக உருக்கிய தருணம் ஒன்றுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது கருணாஸின் மனைவி மேடையில் பேசும்போது கண்கலங்கி அழுத காட்சி.

கண்கலங்கி அழுத கிரேஸ் கருணாஸ்
மேடையில் பேசிய கிரேஸ் கருணாஸ் மிகவும் உணர்ச்சியுடன் தனது மகன் குறித்து பேசினார். "நான் இன்று இந்த மேடையில் வந்து இப்படி பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. இவ்வளவு பேரின் முன்னால் பேசும் போது ரொம்ப பதட்டமாக இருக்கிறது. என் மகன் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறனும் தனுஷும் தான்," என்று அவர் முதலில் கூறினார்.
அசுரன் வாய்ப்பு
அவர் தனது மகன் முதன்முறையாக பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தருணத்தையும் நினைவுகூர்ந்தார். "என் பையனுக்கு அசுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது வெற்றிமாறன் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். 'இந்த படத்தில் அவர் நடித்தால் +2 தேர்வு எழுத முடியாமல் போகலாம். அதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் சொல்லுங்கள். ஆனால் இந்த படத்தில் நடித்தால் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கும்' என்று சொன்னார்.
நானும் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து சரி என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது," என்று அவர் கூறினார்.
தனுஷ் ஒரு பல்கலைக்கழகம்
பின்னர் ஒரு நாள் தன்னுடைய மகன் எப்படி நடிக்கிறார் என்று வெற்றிமாறனிடம் கேட்டதாகவும் அவர் கூறினார். "நான் வெற்றிமாறனிடம் என் பையன் எப்படி நடிக்கிறார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு விஷயம் சொன்னார். 'எல்லாரும் நல்லா நடிக்கிறான் என்று சொல்லி அவனை ஏத்தி விடுறாங்க. ஆனால் தனுஷ் அவனை மகனாக பார்க்க ஆரம்பிச்சிட்டார். இவன் அவரை அப்பாவாக பார்க்க ஆரம்பிச்சிட்டான் என்றால் நல்ல விஷயம். தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் எல்லா விஷயமும் கத்துக்கலாம். அவருடன் இருந்தால் நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமா பற்றி நிறைய கத்துக்குவான்' என்று சொன்னார்," என்று கிரேஸ் கண்கலங்கியபடி பகிர்ந்தார்.
"இன்று அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மையாகி இருக்கிறது. அதனால் தான் என் மகன் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறான்," என்று அவர் கூறியபோது மேடையே சில நிமிடங்கள் அமைதியாகி போனது.
ஜிவி பிரகாஷின் பெருந்தன்மை
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூட சம்பளம் எதுவும் வாங்காமல் இசையமைத்து உதவியிருக்கிறார் என்பதும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சினிமாவில் நல்ல உறவுகள் இருந்தால் தான் இப்படி பலர் ஒன்றாக இணைந்து ஒரு புதிய தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் அறிவுரை
இந்த நிகழ்ச்சியில் பேசிய கென் கருணாஸும் தனது பயணத்தை நினைவுகூர்ந்தார். ஒரு முறை நடிகர் தனுஷ் கருணாஸிடம் "அடுத்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டாராம், அதற்கு கென் "சும்மா இருக்கேன்" என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது தனுஷ், "உருப்படாமல் வெட்டியா இருக்காத. யார்கிட்டயாவது உதவி இயக்குனராக சேரு. அங்கிருந்து தான் உன் பயணம் ஆரம்பிக்க வேண்டும்" என்று அறிவுரை கூறியதாக கென் கருணாஸ் தெரிவித்தார்.
"அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் எனக்கு பெரிய ஊக்கம் கொடுத்தது. அதைத்தான் மனதில் வைத்து நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். இன்று நான் ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு வந்திருக்கிறேன்," என்று அவர் பெருமையாக கூறினார்.
கருணாஸின் நன்றியும் உணர்ச்சியும்
அதே மேடையில் பேசிய கருணாஸும் தனுஷை பற்றி பெருமையாக பேசினார். "என் மகனுக்குள் இருக்கும் திறமையை முதலில் கவனித்தவர் தனுஷ் தான். அவரை உதவி இயக்குனராக சேர்த்து அனுபவம் கொடுத்து, இன்று அவர் தானே ஒரு படம் இயக்கும் நிலைக்கு வர காரணம் தனுஷ் தான்," என்று அவர் தெரிவித்தார்.
ரசிகர்களை உருக்கிய பயணம்
ஒரு காலத்தில் , திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்களில் தனுஷுடன் இணைந்து நடித்தவர் கருணாஸ். இன்று அதே கருணாஸின் மகன் தனுஷுடன் சேர்ந்து நடித்து, மேலும் ஒரு புதிய படத்தையும் இயக்கும் அளவுக்கு வந்திருக்கிறார். இந்த பயணத்தை பார்த்த ரசிகர்கள், "ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறையை எப்படி உயர்த்துகிறது என்பதற்கான அழகான உதாரணம் இதுதான்" என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்
-
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்?












Click it and Unblock the Notifications