திரிஷா சொன்ன சொல் மாறிட்டாங்க! முன்பு மாதிரி இல்ல! இப்போ முடிவு இதுதான்! பிரபலம் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் 20 வருஷத்துக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. "இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார்" என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அது குறித்து பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சித்ரா லட்சுமணன் பேட்டி
சமீபத்தில் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆன சித்ரா லட்சுமணன் அளித்த பேட்டியில், "திரிஷா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்பது உண்மைதான்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய டிஸ்கஷனாக மாறியுள்ளது.
திரிஷாவின் பழைய பேட்டி
இங்கே தான் ரசிகர்களுக்கு பெரிய குழப்பம். ஏனெனில், திரிஷா இதற்கு முன்பு பல பேட்டிகளில், "என் உடம்பில் உயிர் இருக்கும் வரை நான் நடிப்பேன்" என்று தெளிவாக கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, "திருமணம் ஆன பிறகு, குழந்தை பெற்றால் மட்டுமே கொஞ்ச நாள் நான் சினிமாவை விட்டு விலகுவேன்" என்றும் அவர் சொல்லியிருந்தார்.
இப்படி உறுதியா சொன்ன நடிகை, இப்போது திடீரென சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் வந்ததால், "அப்போ அவர் சொன்னது பொய்யா?" "என்ன நடந்தது திடீர்னு?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்யாணம், டாட்டூ, கேரியர்
திரிஷா வாழ்க்கையை பார்த்தால், அவர் எப்போதும் தன் முடிவை தானே எடுத்தவர். ஒரு காலத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தபோது, "திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது" என்ற நிபந்தனை வந்ததால், அந்த கல்யாணத்தையே நிறுத்தியவர் திரிஷா.
அதோடு, "சினிமா என் உயிர்" என்று தனது உடலில் கேமரா டாட்டூ கூட போட்டவர். இப்படி சினிமாவை இவ்வளவு நேசித்தவர் இப்போது விலகப் போகிறார் என்றால், அதற்குப் பின்னால் பெரிய காரணம் இருக்க வேண்டுமே என்பதே ரசிகர்களின் கருத்து.
திரிஷாவை சுற்றும் விவாதம்
கடந்த சில மாதங்களாக திரிஷா பெயர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே வருகிறது. நடிகர் விஜய் உடன் தொடர்பான வதந்திகள், ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள்
விஜய் குடும்ப பிரச்சனை விவகாரத்தில் திரிஷா பெயர் இழுக்கப்பட்ட சர்ச்சை, இன்ஸ்டாகிராமில் "காதல் இல்லாமல் எதற்கும் அர்த்தமில்லை" என்ற பதிவு.இவை எல்லாம் சேர்ந்து, திரிஷா மீது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அரசியலா? புதிய முடிவா?
இதைத் தொடர்ந்து இன்னொரு பேச்சும் கிளம்பியுள்ளது. திரிஷாவுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதாம்... முன்பு ஒரு பேட்டியில் "முதல்வராக வேண்டும்" என்ற ஆசையும் தெரிவித்துள்ளார். அதனால், "சினிமாவை விட்டு அரசியலுக்கு வரப் போகிறாரா?" என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம்
இப்போதைக்கு இந்த தகவல்கள் எல்லாம் பேச்சாக இருந்தாலும், திரிஷா தானாகவே வந்து உறுதி செய்யும் வரை ரசிகர்கள் முழுமையாக நம்ப தயாராக இல்லை. "கருப்பு" படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில், அதற்குப் பிறகு திரிஷாவை திரையில் பார்க்க முடியாதா என்ற கவலையும் ரசிகர்களிடம் உள்ளது.
ஒரு பக்கம் "நான் சினிமாவை விட்டு போக மாட்டேன்" என்ற பழைய பேட்டி... மற்றொரு பக்கம் "இனிமேல் நடிக்க மாட்டார்" என்ற புதிய தகவல்.. இரண்டுக்கும் நடுவில் நின்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். திரிஷா என்ன முடிவு எடுக்கிறார்? இது வெறும் வதந்தியா? அல்லது உண்மையிலேயே பெரிய மாற்றமா? என்பதற்கான பதில், அவர் சொல்வதற்காக தான் அனைவரும் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications