Hot Spot 2 Much Review: ஹாட் ஸ்பாட் 2 எப்படி இருக்கு? இது பலருக்கும் பாடம்! இந்த இடத்தில் சூப்பர்! ரிவ்யூ இதோ
சென்னை: ஹாட்ஸ்பாட் படத்தை இயக்கி விமர்சகர்களிடமும் ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்திடமும் நல்ல பெயர் எடுத்தவர் விக்னேஷ் கார்த்திக். அதே வரிசையில், அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது பாகம் தான் ஹாட்ஸ்பாட் 2 மச்.
முதல் பாகத்தை போலவே, இந்த படமும் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவை விட்டு விட்டு, சமூகத்துக்கு தேவையான சில விஷயங்களை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சி செய்கிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.
நடிப்பில் பிரியா பவானி சங்கர், ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் விஜே, தம்பி ராமைய்யா, எம்.எஸ். பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாட் ஸ்பாட் 2 மச் - கதை
முதல் பாகம் போலவே, இந்த படமும் ஆந்தாலஜி பாணியில் சொல்லப்பட்டுள்ளது. ஒரே கதை அல்ல, மூன்று தனித்தனி கதைகள். ஆனால், மூன்றுமே இன்றைய சமூகத்தை நேரடியாகத் தொடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்குப் பதிலாக பிரியா பவானி சங்கர் தான் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லும் கதாபாத்திரமாக வருகிறார்.
முதல் கதை, இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் பெயர்கள் நேரடியாக சொல்லப்படவில்லை. ஆனால், அடையாளங்களை பார்த்தாலே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை குறிப்பதாக தெளிவாக புரிகிறது.
சமூக வலைதளங்களில் நடைபெறும் ரசிகர் சண்டைகள், அதை இளைஞர்கள் தேவையில்லாமல் தீவிரமாக எடுத்துக்கொள்வது போன்ற விஷயங்களை கலாய்த்து சொல்லும் கதையாக இந்த பகுதி அமைந்துள்ளது. இதில் ரக்ஷன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளனர். கடைசியில் எம்.எஸ். பாஸ்கர் வரும் ஒரு காட்சி மட்டும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது கதை, தம்பி ராமைய்யா மற்றும் சஞ்சனா திவாரி நடிப்பில், பெண்களின் ஆடை சுதந்திரம் மற்றும் அதை சமூகம் பார்க்கும் விதம் குறித்து பேசுகிறது. போல்டாக பேச வேண்டிய விஷயங்களை தயங்காமல் சொல்ல முயற்சி செய்திருப்பது இந்த கதையின் பலம்.
மூன்றாவது கதை, அஸ்வின் மற்றும் பவானி ஸ்ரீ நடிப்பில், நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு இளைஞன் எதிர்காலத்தில் இருக்கும் பெண்ணிடம் தொலைபேசி மூலம் பேசித் காதல் வளர்க்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் சுவாரஸ்யமாக இருந்தாலும், கடந்த ஆண்டு வெளியான ஹவுஸ்மேட் படத்தை பார்த்த உணர்வை மீண்டும் தருகிறது.
ஹாட்ஸ்பாட் 2 ரிவ்யூ
படத்தின் கான்செப்ட் மற்றும் ஐடியா எல்லாம் பாராட்டத்தக்கது. ஆனால், அதை திரையில் கொண்டு வந்த விதம் தான் சற்று பலவீனமாக இருக்கிறது. முதல் ரசிகர் சண்டை கதை முக்கியமான விஷயத்தை பேசினாலும், அது தேவைக்கு அதிகமாக லெந்தாக நகர்கிறது. அதனால், ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அடுத்தடுத்த கதைகளும் ஃபிரெஷ் ஆக இருந்தாலும், திரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பிளஸ் பாயிண்ட்ஸ்
வழக்கமான கமர்ஷியல் படங்களை தவிர்த்து, சமூக அக்கறையோடு புதிய கதைகளை சொல்ல விக்னேஷ் கார்த்திக் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை போதுமான அளவுக்கு செய்துள்ளனர். சில கதாபாத்திரங்களில் இன்னும் கொஞ்சம் ஆழம் கொடுத்திருந்தால், படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
மைனஸ் பாயிண்ட்ஸ்
முதல் ஹாட்ஸ்பாட் படத்தில் இருந்த த்ரில்லிங் அனுபவமும், போல்டான விஷயங்களும் இந்த பாகத்தில் பெரிதாக இல்லை. தணிக்கை காரணமாக பல இடங்களில் சமரசம் செய்து காட்சிகளை உருவாக்கியிருப்பது திரையில் தெளிவாக தெரிகிறது. ரசிகர்களை உள்ளுக்குள் பாதிக்க வேண்டிய காட்சிகள், பாதி அளவுக்கே தாக்கத்தை ஏற்படுத்துவது தான் இந்த படத்தின் முக்கியமான பலவீனம்.
ரசிகர்கள் கருத்து
முதல் பாகத்தை பார்த்தவர்கள், இந்த படம் அந்த அளவுக்கு இல்லை என்கிற கருத்தை அதிகமாக சொல்லி வருகின்றனர். கான்செப்ட் நல்லா இருக்கு, ஆனால் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. மாஸ் ரசிகர்களுக்கான படம் இல்லை, வித்தியாசமான முயற்சிகளை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம் என்றே பொதுவான கருத்து நிலவுகிறது.
ஹாட்ஸ்பாட் 2 மச் என்பது மாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தேடி வருபவர்களுக்கு இல்லை. ஆனால், வித்தியாசமான கதைகள் மற்றும் சமூகத்தைத் தொட்ட விஷயங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications