Jana Nayagan Audio Launch: விஜய்யின் ஜனநாயகன் ஆடியோ லான்ச், தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்.. பக்கத்தில் யார் பாருங்க!
சென்னை: நடிகர் விஜய்யின் திரையுலக வாழ்க்கையின் கடைசி படமாக பேசப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.
மலேசியாவின் பிரம்மாண்டமான புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவை, நடிகர் ரியோ ராஜ் மற்றும் பிரபல தொகுப்பாளினி vj அஞ்சனா இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களின் கலகலப்பான பேச்சு விழாவிற்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரியோ - அஞ்சனா காம்போவில் ரசிகர்கள் உற்சாகம்
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே, ரியோ ராஜ் தனது இயல்பான நகைச்சுவை பாணியில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அஞ்சனாவும், விஜய்யின் திரையுலக பயணம் குறித்த நினைவுகளை பகிர்ந்து, ரசிகர்களிடமிருந்து பெரும் கைதட்டல்களை பெற்றார். சில தருணங்களில், ரசிகர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றது விழாவை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றியது.
கோர்ட் சூட்டில் விஜய்
இந்த விழாவில் நடிகர் விஜய் கோர்ட் சூட் அணிந்து வந்திருக்கிறார். அவருடைய நண்பர் அஜித் போல் கிளாசிக் லுக்கில் விஜய் என்ட்ரி ஆனதும், மைதானம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. இதனை தொகுப்பாளர்களும் சுட்டிக்காட்டி பேச, ரசிகர்கள் "தளபதி" என முழக்கமிட்டனர்.
முன்னதாக 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழாவில், நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வரலாம் என்று முடிவு செய்ததாக விஜய் கூறியிருந்த நிலையில், அதே ஸ்டைலை தனது கடைசி படத்தின் ஆடியோ லாஞ்சிலும் தொடர்ந்தது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரைப்பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில், லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இவர்களை மேடைக்கு அழைத்த ரியோ ராஜ், விஜய்யுடன் அவர்களுக்குள்ள நினைவுகளை பகிர வைக்க, சில சுவாரஸ்யமான அனுபவங்கள் வெளிப்பட்டன.
விழாவின் போது, விஜய்யின் பழைய ஹிட் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியதும், ரசிகர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து ஆடத் தொடங்கினர். இதனை பார்த்த ரியோ ராஜ், "இது ஆடியோ லாஞ்ச் இல்லை... தளபதி திருவிழா" என கூற, மைதானம் முழுவதும் சிரிப்பும் உற்சாகமும் பரவியது.
மேலும், ஒரு ரசிகர் மேடையை நோக்கி விஜய்யிடம் கை அசைத்தபோது, விஜய் அவரை பார்த்து புன்னகையுடன் கை அசைத்தது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஞ்சனாவும், "இந்த தருணங்கள் தான் விஜய்யை ரசிகர்களின் மனதில் எப்போதும் நிலைநிறுத்துகிறது" என குறிப்பிட்டார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!











Click it and Unblock the Notifications