ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
சென்னை: நடிகர் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படம் பற்றிய பேச்சு இப்போது வேறு ஒரு கோணத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ரிலீஸ் தாமதம் மட்டும் இல்லாமல், இந்த படம் விஜய்யின் வாழ்க்கையிலேயே ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு சென்ற விஜய்
விஜய் தற்போது முழுக்க அரசியலிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலை முன்னிட்டு வேகமாக வேலை செய்து வருகிறது.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படம் ஒரு சாதாரண படமாக இல்லாமல், அவர் ரசிகர்களுக்கு கொடுக்கும் கடைசி சினிமா நினைவாகவே பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் பிரச்சனை
இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது என்பதால் தான் சிக்கல்கள் அதிகமா இருக்கிறது என்ற பேச்சும் இருக்கு. ஹெச் வினோத் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால் படத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பந்தமான காட்சிகள், வசனங்கள் ஆகியவை தணிக்கையில் சிக்கியிருக்கலாம் என்றே சிலர் கூறுகிறார்கள்.
தாமதத்தின் பின்னணி என்ன?
இந்த படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட நினைத்தார்கள். பிறகு பொங்கலுக்கு மாற்றினார்கள். ஆனாலும் தணிக்கை அனுமதி கிடைக்காததால் படம் வெளியே வர முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்றும் உடனடி தீர்வு கிடைக்கவில்லை. இறுதியில் மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
வியாபார கணக்குகளும் தாக்கம்
அதுபோல சென்சார் இனி கிடைத்தாலும் தேர்தல் முடிவடைந்த பிறகு தான் இந்த படத்தை வெளியிட முடியும். இதனால் எலக்சன் முடிந்து ஜூன் மாதம் விஜயின் பிறந்தநாளுக்கு இந்த படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அந்த சமயத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரஜினி விஜய் மோதல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்த நிலையில் இப்போது ஒரு தகவல் வந்திருக்கிறது. அதாவது ஜூலை மாதத்தில் தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஓடிடி மற்றும் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் அதை மீண்டும் விற்பனை செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் நெட்டிசன்கள் இந்த தகவலை கேட்டதும் ரஜினியுடன் போட்டியிட பயந்து போய் விஜய் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறாரா என்று கலாய்க்க தொடங்கி விட்டனர்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications