Jananayagan: கடைசி நேரத்தில் ஜனநாயகன் இசை விழாவுக்கு வந்த சிக்கல்? இயற்கையின் மிரட்டல்! நிகழ்ச்சி நடக்குமா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் கோலிவுட்டில் அதீத எதிர்பார்ப்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக மலேசியாவில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் பயணத்தில் முழுமையாக இறங்கவிருக்கும் விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற பேச்சு நிலவுவதால், இந்தப் படம் ரசிகர்களுக்கு செண்டிமெண்டாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே 'ஜனநாயகன்' படம் கோலிவுட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் நடத்தப்பட்டதற்கு காரணம்
படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடத்தப்பட்டால் அரசியல் ரீதியான தேவையில்லாத சர்ச்சைகள் எழலாம் என்பதால், விழாவை வெளிநாட்டில் நடத்த படக்குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே மலேசியாவிற்கு போயிருக்கிறார்கள்.
எதிர்பாராத சிக்கல்
இந்நிலையில், இன்று மாலை கோலாலம்பூரில் கனமழைக்கு 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வெளியான வானிலை அறிக்கை ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய ஸ்டேடியத்தில், 80,000-க்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் நிகழ்ச்சி பாதிக்கப்படுமா என்ற பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.
மேடை அமைப்புகள் தயார் நிலையில் இருந்தாலும், வெளிப்புற ஸ்டேடியம் என்பதால் ரசிகர்களுக்கு அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால், விழா முழுமையாக தடையின்றி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தளபதி திருவிழா
'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் படங்களின் பிரபல பாடல்களை பல பின்னணி பாடகர்கள் நேரலையில் பாட உள்ளனர். வெளிநாட்டில் இருந்தாலும், விஜய்க்காக ரசிகர்கள் திரண்டு வருவது இந்த விழாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

பொங்கலுக்கு ஜனநாயகன்
அனைத்து சிக்கல்களையும் கடந்து, 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்குமுன் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழா, எந்த தடையுமின்றி நடைபெறுமா? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications