Kandha box office: மாஸ் ஹிட் கொடுத்த துல்கர் சல்மானுக்கு பெரிய ஷாக்! காந்தா படத்தில் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் உச்சகட்ட நம்பிக்கையுடன் தயாரித்து, நடித்திருக்கும் 'காந்தா' திரைப்படம் நேற்று (நவ.14) திரையரங்குகளில் வெளியானது. பீரியட் ஜானரில் வந்திருக்கும் இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், சுமாரான விமர்சனங்களையே பெற்றிருப்பதால், படக்குழுவினர் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி, துல்கர் சல்மானுக்குப் பெரிய ஷாக் கொடுத்திருக்கிறது!

துல்கர் சல்மானின் நடிப்பு & தயாரிப்பு
மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் காந்தா படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், இப்படத்தைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி இருந்தது. அது விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு, ரசிகர்களிடம் காந்தா படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
படத்தின் கதைக்களமும், விமர்சனமும்
துல்கர் சல்மான் உச்சகட்ட நம்பிக்கை வைத்திருந்த இந்தப் படம், வெளியான முதல் காட்சியிலிருந்தே நெகட்டிவ் விமர்சனங்களைச் சந்திக்கத் தொடங்கியது. இரண்டு நடிகர்களின் ஈகோவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சில காட்சிகள் தவிர்த்து மற்றக் காட்சிகள் பெரிதாக விறுவிறுப்பாக இல்லை என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திரைக்கதை தொய்வு
படத்தின் திரைக்கதை ஏகப்பட்ட இடங்களில் தொய்வடைந்திருப்பதாகவும், நெகட்டிவ் விமர்சனமே அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முதல் பாதி முடிந்ததுமே எதிர்மறையான பேச்சுக்கள் வரத் தொடங்கின. முதல் காட்சி முடிந்த பிறகு, இந்தப் பேச்சுக்கள் மும்மடங்காகி பரவியதால், ஒட்டுமொத்த படக்குழுவுமே அப்செட்டில் இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகர்களுக்கு கிடைத்த பாராட்டு
படம் இப்படி விமர்சனங்களை சந்தித்தாலும், இதில் நடித்த நடிகர்களுக்குப் பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. துல்கர் சல்மான் நடிப்புக்குக் கைத்தட்டல்கள் கிடைத்திருக்கின்றன. நிச்சயம் இந்தப் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை வெல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயின் பாக்யஸ்ரீ போர்ஸும் தனதுப் பங்கைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவரது மார்க்கெட் இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் உயரும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் சமுத்திரக்கனியும் தனதுக் கதாபாத்திரத்தை அவ்வளவு அருமையாகச் செய்திருந்தார். நடிகர்களின் நடிப்பு மட்டுமே படத்துக்கு ஆறுதலாகவும், சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இப்படி எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்த 'காந்தா' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
காந்தா வசூல் நிலவரம்
Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, காந்தா திரைப்படம் இந்தியாவின் முதல் நாளில் வெறும் நான்கு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். உலக அளவில் ஏழு கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் நாளிலேயே இவ்வளவுச் சுமாரான வசூல் நிலையைச் சந்தித்திருக்கும் காந்தா திரைப்படம், இனி வரும் நாட்களில் மீண்டு வந்து துல்கர் சல்மானுக்கு லாபத்தைக் கொடுக்குமா அல்லது நஷ்டத்தைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications