கந்தன் மலைக்கு தியேட்டர்தான் கிடைக்கல! இப்போ போஸ்டில் இவ்வளவு பெரிய மிஸ்டேக்! ட்ரோலில் சிக்கிய H ராஜா
சென்னை: தமிழ்நாடு பாஜகவை சார்ந்த ஹெச். ராஜா சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் பேசும் பல விஷயங்கள் சர்ச்சையை கிளப்பி விடும். அதனாலேயே எப்போதும் மீம்ஸ்களில் வைரலாகி வருகிறார். ஹெச். ராஜா இப்போது ஹீரோவாக கந்தமலை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த பட போஸ்டரில் செய்த மிஸ்டேக் தான் இப்போ சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹெச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை படத்தின் டிரெய்லர் அப்போது வெளியாகி இந்த பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்த முயற்சித்து வருவதாக எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஹெச்.ராஜா நடிப்பில் கந்தன் மலை என்ற படம் இன்று மாலை வெளியாக உள்ளது.
வீர முருகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், அதில் வந்த அடங்க மறு அத்துமீறு கும்பலா நீ என்ற வெளிப்படையாக வசனம் என அனைத்துமே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தின் டிரைலரில், தேவர், இமானுவேல் சேகரன், திராவிட மாடல் ஆட்சி என பல விஷயங்கள் குறித்த வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
அதேபோல், உடுமலை கொலை, சர்ச் கிறிஸ்துவர்களிடமும், மசூதி இஸ்லாமியாகளிடமும் இருக்கிறது. ஆனால் இந்து கோவில்கள் யாரிடம் இருக்கிறது என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இமானுவேல் சேகரனை கொன்றது முத்துராமலிங்க தேவரா? அவர் மீதே நாங்கள் எப்.ஐ.ஆர் போடவில்லையா? என்ற வசனம் டிரெய்லரின் தொடக்கத்தில் வருகிறது.
கந்தமலை படத்தின் டிரைலர் வெளியான பிறகு அதிகமாக கலாய்க்கப்பட்டும், சிலரால் பாராட்டப்படும் வந்தது. இதனாலையே இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என்று பார்த்தால் கடைசியில் படகுழு யூடியூப் தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். அதுவும் இன்று மாலை இந்த படம் தாமரை யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்ய உள்ளது.
இப்படியான நிலையில் இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழுவும் படத்தின் ஹீரோவாக நடித்துள்ள ஹெச். ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் இப்போது ஒரு சொதப்பல் நடந்திருக்கிறது. அதாவது இந்த படம் எப்போது வெளியாகும் என்று தேதி குறிப்பிட்டதில் மாதத்தை தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
நாளை முதல் என்று குறிப்பிடப்பட்டு விட்டு அதாவது டிசம்பர் மாதம் 19ஆம் தேதி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ஆறாவது மாதம் அதாவது ஜூன் மாதம் 19ஆம் தேதி 2025 youtube-ல் சேனலில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தேதி தவறாக இருப்பதால் நெட்டிசன்கள் பலரும் அதை சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் இந்த தவறை கவனிக்காமல் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். எச் ராஜா தன்னுடைய கருத்துகள் பலவற்றையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தான் வெளியிடுவார் ஆனால் அவருடைய எக்ஸ் தளத்தை கவனிப்பது அவர் இல்லை என்றும், அவருடைய அட்மின் தான் கவனித்து வருகிறார்கள் என்றும் ஏற்கனவே கூறி இருக்கிறார்.
அதனால் அட்மின் இப்படி தவறாக தேதியை குறிப்பிட்டு இருக்கிறார் அதனால் யாரும் எச். ராஜாவை விமர்சிக்க வேண்டாம் என்றும் சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ப்ரோமோஷனிலே இப்படி தப்பு தப்பாக தகவலை போட்டால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட பார்க்க மாட்டார்கள் என்றும் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பே இப்படி சிக்கிக் கொண்டிருக்கிறதே, வெளியான பிறகு என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications